சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனி மூட்டம்.. வாகன ஓட்டிகள் அவதி.. விமானங்கள் ரத்து!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது.
Recommended Video

சென்னை: புறநகர் பகுதிகளில் கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். சென்னை வரும் 12 விமானங்கள் பனி மூட்டத்தால் திருப்பிவிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியது. இதனை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் தொடக்கத்தில் சில நாட்கள் மழை பெய்தது.
பின்னர் வடகிழக்குப் பருவமழை ஓய்வு எடுத்து வருகிறது. இதனிடையே சென்னை உள்ளிட்ட இடங்களில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.
|
கடுமையான பனிமூட்டம்
இதன் காரணமாக அதிகாலை நேரங்களில் குளிர் நிலவி வருகின்றது. இந்நிலையில் இன்று கடுமையான பனிமூட்டம் நீடிக்கிறது.

சென்னையில் பனிமூட்டம்
சென்னை வளசரவாக்கம், போரூர், ராமாபுரம் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம் அருகே பொத்தேரி, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பனிமூட்டம் நிலவியது.

வாகன ஓட்டிகள் அவதி
பனி மூட்டம் காரணமாக ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். பனிமூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விடிந்த பின்னரும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி செல்கின்றனர்.

திருப்பிவிடப்பட்ட விமானங்கள்
கடும் பனிமூட்டத்தால் சென்னையில் தரையிறங்க முடியாமல் சில விமானங்கள் பெங்களூரு திருப்பி விடப்பட்டன. பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய மஸ்கட், மொரீசியஸ் விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன.

12 விமானங்கள் தாமதம்
லண்டனிலிருந்து சென்னை வரும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இருந்து செல்லும் 12 விமானங்களின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.

டெல்லியை போல்..
காலை 9 மணியை தாண்டியும் பனிமூட்டம் நீடித்ததால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். சென்னை நகரின் பல இடங்களிலும் நீடித்த பனிமூட்டத்தால் சென்னை டெல்லியை போன்று இருப்பதாக சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications