புதுக் கட்சி தொடங்க முடிவு செய்து விட்டார் வாசன்?.. நாளை செய்தியாளர்களைச் சந்திக்கிறார்!
சென்னை: தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துத் தெரிவிக்க நாளை மதியம் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன். அப்போது தனிக்கட்சி குறித்து அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ஞானதேசிகன் விலகியதைத் தொடர்ந்து, உடனடியாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் மேலிடம் தமிழக காங்கிரஸை கண்டு கொள்வதில்லை என்று குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், நாளை புதிய முடிவை அறிவிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜிகே வாசன் ஆதரவாளர்கள் பலரும் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளதால், அவரது தலைமையில் மீண்டும் தமாகா உதயமாகலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. இதற்கிடையே, 'நாட்டின் நலன் கருதி, பரந்த மனதோடு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்' என ஜி.கே.வாசனுக்கு அழைப்பு விடுத்தார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். இது தொடர்பாக ஜி.கே.வாசன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடன் பேசிய ஜி.கே.வாசன், பாஜகவில் சேரும் படி தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது தவறு என விளக்கமளித்துள்ளார்.
மேலும், தமிழக மீனவர் பிரச்னையில் பாஜக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும். தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியில் அடித்தளம் அமைக்கப்படும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை அறிவிக்கப்படும்' என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாளை மதியம் 12.01 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்க வாசன் திட்டமிட்டுள்ளார். சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
அப்போது புதிய கட்சி தொடர்பான விவரங்களை ஜி.கே.வாசன் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
-
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட்












Click it and Unblock the Notifications