திமுக போஸ்டரில் கருணாநிதி மிஸ்ஸிங்.. தொண்டர்கள் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவினரால் ஒட்டப்பட்ட போஸ்டரில் கருணாநிதியின் படம் மிஸ் ஆகியிருப்பதை கண்டு தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அப்பதவிக்கு மு.க.ஸ்டாலினை நிர்வாகிகள் தேர்வு செய்தனர்.

அதுபோல் திமுக பொருளாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் துரைமுருகன் வகித்து வந்த திமுக முதன்மை செயலாளர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. அது கனிமொழி, எ.வ.வேலு, டி.ஆர். பாலு ஆகியோரில் யாருக்காவது ஒருவருக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

போஸ்டர்

போஸ்டர்

பின்னர் கட்சி தலைமை ஆலோசனை நடத்தி அப்பதவியை டி.ஆர். பாலுவுக்கே வழங்கியது. இதற்கு நன்றி அறிவித்து பாலுவின் ஆதரவாளர்கள் எங்கோ போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

கருணாநிதி இருப்பது போன்று தெரியவில்லை

கருணாநிதி இருப்பது போன்று தெரியவில்லை

அதில் டி.ஆர். பாலு, ஸ்டாலின், இதர நிர்வாகிகள் படம் ஆகியன பெரிய பெரியதாக போடப்பட்டுள்ளது. ஆனால் கருணாநிதியின் படம் இல்லவே இல்லை. போஸ்டரில் மேலே பெட்டி பெட்டியாக யாருடைய படங்களையோ போட்டுள்ளனர். அதிலும் கருணாநிதி இருப்பது போன்று தெரியவில்லை.

டி.ஆர். பாலு

டி.ஆர். பாலு

அப்படியே கருணாநிதியின் படம் அதில் இருந்தால் மற்ற நிர்வாகிகளின் படங்களை காட்டிலும் அவரது படத்தை சிறிதாக போட வேண்டிய அவசியம் என்ன? இதை டி.ஆர்.பாலுவும் எப்படி அனுமதித்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தொண்டன் கேள்வி

தொண்டன் கேள்வி

இதேபோல் தஞ்சாவூரில் சமீபத்தில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பேனரில் கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இது தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உதயநிதி விளக்கம்

உதயநிதி விளக்கம்

திமுகவில் எந்த ஒரு பதவியும் வகிக்காத உதயநிதியின் படத்தை ஏன் வைத்தார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து தொண்டர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு திமுக தொண்டனாய் எவ்வளவு அருவருப்பா இருக்கு தெரியுமா. உங்களுக்கு தோணலையா, முன்னணி தலைவர்கள் மேடைல உங்க போட்டோ இடம் பெற என்ன தகுதி உள்ளது என்று கேட்டு உதயநிதிக்கும் அனுப்பியிருந்தார். இதை புரிந்து கொண்ட உதயநிதியும், தப்புதான் இனி நடக்காது என்று பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+