தமிழகத்தில் அரிசி பற்றாக்குறை இல்லை... அடித்துப் பேசும் அமைச்சர் காமராஜ்!
தமிழகத்தில் அரிசி பற்றாக்குறை இல்லை என அமைச்சர் காமராஜ் உறுதியாக தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை தமிழகத்தில் அரிசி பற்றாக்குறை இல்லை என அமைச்சர் காமராஜ் உறுதியாக தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் முட்டை விற்பனைன குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
நாடுமுழுவதும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படவில்லை என அவர் தெரிவித்தார். பிளாஸ்டிக் அரிசி கலப்படம் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
பிளாஸ்டிக் முட்டை விற்பனை குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில அரிசி தட்டுப்பாடு இல்லை என்றும் அமைச்சர் காமராஜ் கூறினார்.












Click it and Unblock the Notifications