வானில் தெரிந்த சூப்பர் மூன்.. சென்னை முதல் குமரி வரை மக்கள் உற்சாகம்
சூப்பர் மூனை வானில் பார்த்த மக்கள் போட்டோக்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
சென்னை: வானத்தில் ஏற்படும் அபூர்வ நிகழ்வான 'சூப்பர் நிலவு' நேற்று சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகத்தின் பெரும் பகுதிகளில் நன்றாக தெரிந்தது.
பூமிக்கும், நிலவுக்கும் இடையேயான சராசரி தொலைவு 3,84,500 கி.மீ. ஆகும். ஆனால், இத்தொலைவு 3,63,396 கி.மீ. முதல் 4,05,504 கி.மீ. வரை வேறுபடும். பூமியை நிலவு நெருங்கி வரும்போது வழக்கத்தைவிட பிரகாசமாகக் காணப்படும். அதுவே "சூப்பர் மூன்' என அழைக்கப்படுகிறது.

இதுபோன்ற அரிய நிகழ்வு நேற்று வானில் நிகழ்ந்தது. வழக்கமாக பௌர்ணமி தினத்தில் காட்சியளிக்கும் நிலவைவிட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிக பிரகாசத்துடனும் காணப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டனர். மாலை 6.30 மணி முதல் வழக்கத்தைவிடப் பிரகாசமான நிலவு தெரியத் தொடங்கியது. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டதுடன் புகைப்படங்களும் எடுத்து மகிழ்ந்தனர்.
சென்னை பிர்லா கோளரங்கத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்காக சிறப்பு ஏற்பாடாக திறந்தவெளியில் தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
இதன் மூலம் பார்வையாளர்கள் நிலாவை பார்வையிட்டனர். நிலவில் எரிமலை குழம்புகள் வழிந்தோடிய சமவெளி பகுதிகள் திட்டு திட்டுகளாக இருப்பதை கூட துல்லியமாக காண முடிந்தது என்று மாணவர்கள் தெரிவித்தனர். பலரும் போட்டோக்கள் எடுத்து அபூர்வ தருணத்தை பத்திரப்படுத்திக்கொண்டனர். மேலும் சிலரோ பெரிய வித்தியாசமே தெரியவில்லையே எனவும் கூறினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications