ட்விங்குள் ட்விங்குள் லிட்டில் ஸ்டார்... நள்ளிரவில் வெளியான தெறி டீசர்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே விஜயின் தெறி டீசர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புலி படத்தை அடுத்து இளைய தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் நடித்து வரும் தெறி படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் பர்ஸ்ட் லுக் அதிகரித்து இருந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் டீசர் திட்டமிட்டபடி, நள்ளிரவு 12 மணிக்கு ரிலீசானது.
கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தில் விஜய், சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், அழகம் பெருமாள், காளி வெங்கட், உள்பட பலர் நடித்து வரும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.













Click it and Unblock the Notifications