இந்தக் கூட்டணிகள் தேர்தல் வரையாவது நீடிக்குமா? - பழ நெடுமாறன் கேள்வி
புதுக்கோட்டை: இப்போது அமைந்துள்ள கூட்டணிகள் தேர்தல் வரையாவது நீடிக்குமா என்ற நிலை உள்ளது என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ நெடுமாறன் கூறினார்.
ஒரு விழாவில் பங்கேற்க புதுக்கோட்டைக்கு வந்த பழ.நெடுமாறன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது..

2016 சட்டமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டணிகள் தடுமாற்றத்தில் உள்ளன. தற்போது அரசியல் கட்சிகள் அமைத்துள்ள கூட்டணிகள் தேர்தல் வரை நீடிக்குமா என்ற நிலை உள்ளது. தேர்தல் வரை நீடிக்காது.
எங்கள் ஆதரவு இந்தத் தேர்தலில் யாருக்கு என்பதை விரைவில் சொல்கிறோம்.
முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்களை அவர்களின் சொந்த விருப்பம் இன்றி அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவு உள்ளது. அந்த உத்தரவை நானும் மருத்தவர் ராமதாசும் நீதிமன்றம் சென்றுப் பெற்றுள்ளோம்.
ஆனால் இப்போது நாடு கடத்தும் செயலில் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க அவர்களின் சொந்த விரும்பம் இன்றி அவர்களை அனுப்ப நேரிட்டால் நாங்கள் மீண்டும் நீதிமன்றம் செல்வோம்," என்றார்.
தேர்தலுக்காக மக்கள் நலக் கூட்டணி தே.மு.தி.கவுடன் உடன்பாடு கொண்ட நாளில் பழ.நெடுமாறன் இப்படி சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
