விண்ணுலகத்திலிருந்து மோடி ஆட்சியைப் பார்க்கிறார் தேவர்.. சொல்வது பொன்னார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முத்துராமலிங்கத் தேவர் இன்று இருந்திருந்தால் பிரதமர் மோடி அரசை பாராட்டியிருப்பார் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 110வது ஜெயந்தி விழா, 55வது குருபூஜை விழா தமிழகத்தில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் முகாமிட்டுள்ளனர்.

Thevar Watching in Modi government says Pon. Rathakrishnan

மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் அமைச்ச் பொன். ராதாகிருஷ்ணன். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிகச்சிறந்த வீரமிக்க சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவர் என்று கூறினார்.

இப்போது முத்துராமலிங்கத் தேவர் இருந்திருந்தால் மோடி அரசை மிகவும் பாராட்டியிருப்பார். ஊழற்ற, லஞ்ச லாவண்யம் அற்ற அரசைத்தான் முத்துராமலிங்கத்தேவர் விரும்பினார். அதே போல ஒரு அரசை பிரதமர் மோடி கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

விண்ணுலகில் இருந்து பிரதமர் மோடி அரசை முத்துராமலிங்கத் தேவர் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Central minister Pon. Rathakrishnan has floral tributes to Muthuramalingathevar statue in Goripalayam,Madurai.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற