அடிக்கிறது கொள்ளை.. இதுல கோவம் வேறயா கோவம்.. வீட்டு பொருட்களை அடித்து நொறுக்கிய திருடர்கள்!
திருடி செல்ல எதுவும் இல்லாததால் பொருட்களை கொள்ளையர்கள் அடித்து நொறுக்கினர்.
Recommended Video

சென்னை: அடிக்கிறதே கொள்ளை.. இதில் ஆத்திரம் பொங்கி வழியுது ஒரு வீட்டில் ஆட்டைய போட நினைத்த களவாணிகளுக்கு.
ஈஞ்சம்பாக்கம் பகுதியில் குடியிருப்பவர் பிரபாகர். இவர் பெருங்குடியில் உள்ள கார் கம்பெனியில் மேனேஜர் ஆவார். இவர் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், தனது மனைவி கல்பனா மற்றும் 3 குழந்தைகளை அழைத்து கொண்டு கொடைக்கானலுக்கு சென்றிருந்தார்.

இன்று காலை ஊர் திரும்பி பிரபாகர், தனது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, விலை உயர்ந்த பொருட்களாக பெரிய டி.வி., கண்ணாடிகளாலேயே ஜன்னல்கள், அலங்கார பெட்டிகள் ஆகியவை எல்லாம் சுக்குநூறாக நொறுங்கியுள்ளதை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பிரபாகர் நீலாங்கரை போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் விரைந்த வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதில், பூட்டிக் கிடந்த வீடு என்பதால் கொள்ளையர்கள் உள்ளே எளிதாக நுழைந்துவிட்டதாக கூறினர். வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லாததால் ஆத்திரமடைந்துள்ளதாகவும் அதனால் வீட்டிலிருந்த டிவி., மற்றும் கண்ணாடி பொருட்களை கொள்ளையர்கள் அடித்து நொறுக்கியதாகவும் கூறினர். ஆனால் கொள்ளையடித்து செல்லும்போது, பூஜை அறையில் சில வெள்ளிப் பொருட்களை மட்டும் அவர்கள் எடுத்து சென்றுள்ளனர் என்றனர்.
இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக கூறிய போலீசார், வீட்டினுள் நுழையும்போதே அங்கிருந்த சிசிடிவி கேமராக்களின் இணைப்பையும் துண்டித்துவிட்டுத்தான் கொள்ளை முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், எனினும் அவர்களது கைரேகைகள் எடுக்கப்பட்டுள்ளதால் விரைவில் பிடித்து விடுவோம் என்றனர்.
கொள்ளையடிக்க சென்ற வீட்டில் நகை, பொருட்கள் எதுவும் இல்லாத ஆத்திரத்தில் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications