குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து 33 பவுன் நகை கொள்ளை – கோவையில் பரபரப்பு
கோவை: கோவையில் திருடர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து நகையைக் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், நீலிக்கோணாம்பாளையம், பழனியப்பா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் தனியார் வங்கி மேலாளர். இவரது மனைவி நான்சி கணினி மென்பொருள் பொறியாளராக உள்ளார். இவர்களுக்கு எட்டு மாத குழந்தை உள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை மனோஜ் வேலைக்கு கிளம்பி சென்றுவிட்டார். குழந்தையுடன் நான்சி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, இரண்டு பேர் கோவிலுக்கு நிதி வசூலிப்பதாக உண்டியலுடன் வந்தனர்.
வீட்டில் ஒரு பெண் தனியாக இருப்பதை அறிந்த அவர்கள், உள்ளே புகுந்து கதவை தாழிட்டனர். குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பீரோ சாவியை கேட்டனர். நான்சி சாவியை கொடுத்ததும், பீரோவில் இருந்த 33 பவுன் நகைகளை கொள்ளையடித்துகொண்டு இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
நடந்த சம்பவம் குறித்து மனோஜூக்கு போனில் தெரிவித்துள்ளார் நான்சி. இதையடுத்து மனோஜ் அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லுார் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையரை தேடி வருகின்றனர்.
-
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications