காங்கிரஸ் ஆட்சியமைக்க 3வது அணி ஆதரவு தரும்… சொல்வது 'ஏர்போர்ட் நாசா'
சென்னை: காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க 3வது அணி ஆதரவு தெரிவிக்கும் என்று மத்திய இணையமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது:
இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னை குண்டுவெடிப்பு குறித்து மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது என்றும், தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்து தக்க சமயத்தில் தகவல் அளிக்கப்படுகிறது.
மத்தியில் பாரதியஜனதா கட்சி கனவிலும் கூட ஆட்சி அமைக்க முடியாது. அதே சமயம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க 3வது அணி ஆதரவு அளிக்கும் என்றும் நாராயணசாமி கூறினார்.
ராகுல் கருத்து
3வது அணிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருந்த நிலையில், 3வது அணிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது என்றும், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும், அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
நாராயணசாமி கருத்து
இந்நிலையில், இரண்டு பேரின் கருத்து மாற்றாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க 3வது அணி ஆதரவு அளிக்கும் என்று மத்திய அமைச்சர் நராயணசாமி கூறியிருக்கிறார்.
மக்கள் தீர்ப்பு
முன்னதாக காரைக்காலில் பேசிய நாராயணசாமி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏராளமான நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இவைகளை நாம் முறையாக மக்களிடம் கொண்டு செல்லாததால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. எனினும், தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்பை காங்கிரஸ் கட்சி முழு மனதோடு ஏற்கும் என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications