ஆடு பாம்பே.. நீ ஆடு பாம்பே.. கருவளையத்தை நீக்க "ஸ்நேக்" டிரீட்மென்ட்.. அலறிய ஓடிய மக்கள்!
திருபுவனை: திருபுவனை பகுதியில் கருவளையத்தை நீக்குவதாக நல்லப் பாம்பை முகத்தில் தேய்த்து நூதன சிகிச்சை அளித்த நிலையில் இளைஞர்கள் சிலர் அஞ்சி ஓடியது காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முகத்தில் கண்ணுக்கு கீழ், கழுத்தை சுற்றி கருவளையங்கள் ஆண், பெண்களுக்கு இருக்கும். இதை நீக்க பல்வேறு சாதனங்களை இரு பாலரும் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் என்னதான் விலை அதிகமான பொருள்களை வாங்கினாலும் அதனால் காசு விரயம் ஆகிறதே ஒழிய பலன் என்று பார்த்தால் பூஜ்ஜியம்தான்.

பொதுமக்கள்
திருவண்ணாமலை மாவட்டம், கீழ் புதூரைச் சேர்ந்த குமரேசன் என்ற பாம்பாட்டி திருபுவனையில் தங்கியிருந்தார். இவர் அங்குள்ள கிராமங்களுக்கு சென்று பொதுமக்களின் பலவீனத்தை தெரிந்து கொண்டு அதை வைத்து காசு பார்க்க முடிவு செய்தார்.

கருவளையம்
முகத்தில் இருக்கும் கருவளையத்தை நீக்க வேண்டுமானால் என்னிடம் வாருங்கள், விஷப்பாம்பை வைத்து முகத்தில் தேய்த்தால் போதும். அவை இருந்த இடம் தெரியாமல் போய் விடும் என ஆசை வார்த்தை கூறி இந்த நூதன சிகிச்சை பெற அழைத்துள்ளார்.

பாம்பை தேய்த்து
இதை நம்பி பலரும் இந்த சிகிச்சை பெற முன்வந்தனர். அந்த பாம்பாட்டி 100 ரூபாயை வாங்கிக் கொண்டு அதிக விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்மை கையில் சுற்றி கருவளையத்தை நீக்குவதாக கூறி அவர்களது முகத்தில் பாம்பை தேய்த்தார். அப்போது பலர் அஞ்சி நடுங்கியபடியே இந்த சிகிச்சையை மேற்கொண்டனர்.

பாம்பாட்டி
இளைஞர்கள் பலர் பயந்து ஓடினர். அபாயகரமான இந்த பாம்பு சிகிச்சையை விடாத அந்த பாம்பாட்டி, நின்று விடாமல் மஞ்தள் கரு கலந்த ஒரு மருந்தையும் கொடுத்து அதை முகத்தில் தேய்த்து வருமாறு பொதுமக்களுக்கு அந்த பாம்பாட்டி டிப்ஸ் கொடுத்தது உச்சக்கட்ட அதிர்ச்சியாகும்.












Click it and Unblock the Notifications