உளுந்தூர்ப்பேட்டையில் விஜயகாந்த் மகத்தான வெற்றி பெறுவார்.. திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகத்தான வெற்றி பெறுவார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை திருமாவளவன் வெளியிட்டார். 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை அப்போது திருமாவளவன் அறிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ‘தேமுதிக நிறுவனத் தலைவரும், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா. கூட்டணி முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். விஜயகாந்த் மகத்தான வெற்றி பெறுவார்' என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications