போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு ஓட்டு போட மறந்த திருமாவளவன்
சிதம்பரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு வாக்களிக்க மறுந்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இருக்கும் தனது சொந்த ஊரான அங்கனூருக்கு வாக்களிக்க சென்றார்.
அவர் தனது தாய் பெரியம்மாள், சகோதரர்கள் செங்குட்டுவன், பாரி ஆகியோருடன் அங்கனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு இன்று காலை சென்றார். அவர் அட்டயைால் மறைத்து வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் இருக்கும் இடத்திற்கு சென்றார்.

அப்போது அவரை போட்டோவுக்கு போஸ் கொடுக்குமாறு பத்திரிக்கையாளர்கள் கேட்டுக் கொண்டதால் அவரும் போஸ் கொடுத்தார். ஆனால் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒரு பட்டனை அழுத்தி வாக்கை பதிவு செய்ய மறந்துவிட்டு கிளம்பினார். இதையடுத்து அவரது சகோதரர் வாக்களிக்க வந்தபோது தான் திருமா வாக்களிக்காமல் சென்றதை தேர்தல் அதிகாரி கண்டுபிடித்து அவரை அழைத்து வாக்களிக்குமாறு கூறினார்.
இதையடுத்து திருமா மீண்டும் வந்து வாக்களித்துவிட்டு தனது மறதியை நினைத்து சிரித்துக் கொண்டே சென்றார்.












Click it and Unblock the Notifications