காட்டுமன்னார் கோவில் தொகுதியில் மறு தேர்தல் நடத்தக்கோரி திருமாவளவன் வழக்கு
சென்னை: காட்டுமன்னார் கோவில் சட்டசபை தொகுதியில் மறு தேர்தல் நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் சட்டசபை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் முருகுமாறன் போட்டியிட்டார்.

தேர்தல் முடிவின் போது, திருமாவளவன் 48,363 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் 48,450 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார் திருமாவளவன்.
இதையடுத்து முருகுமாறன் வெற்றிப் பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் தேர்தல் வழக்கை இன்று தாக்கல் செய்தார். அதில்,‘ஆளும் கட்சியை சேர்ந்த முருகுமாறனுக்கு, அரசு அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது. அதனால், முருகுமாறன் முறைகேடாக இந்த தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளார்.
எனவே, அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். மேலும், காட்டுமன்னார் கோவில் தொகுதியில் மறுதேர்தல் நடத்தவும் அதில் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications