“எம்.ஜி.ஆர். 100”.. 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்கள் விடுதலை.. முதல்வரை சந்தித்து திருமா மனு
எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி 10 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் முதல்வரைச் சந்தித்து மனு அளித்துள்ளார்.
சென்னை: வரும் 17ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடங்க உள்ளது. இதனையொட்டி 10 ஆண்டுகள் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.
தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து மனு அளித்த பின்னர், திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், விவசாய தொழிலாளர்களுக்கு ஓர் ஆண்டில் 3 மாதங்களுக்கு ரூ. 3000 இழப்பீடு வழங்க வேண்டும். மீன் பிடி தடை காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படுவது போல ஆண்டு தோறும் விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.
ஜனவரி 17ம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடங்க உள்ளது. அவரது நூற்றாண்டையொட்டி 10 ஆண்டுகாலம் சிறையில் உள்ள அனைவருக்கும் விடுதலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்திருக்கிறோம்.
இதுகுறித்து, பரிசீலிப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார். அத்துடன் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழங்களில் தலித் சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறோம் என்று திருமாவளவன கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications