விஜயகாந்த்துடன் திருமா. சந்திப்பு... இன்று இரவு வைகோவைப் பார்க்கிறார்
சென்னை: தலைவர்கள் நகர் வலம் வரிசையில் தற்போது விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஒவ்வொரு தலைவராக சந்தித்து வருகிறார். அந்த வரிசையில் இன்று தேமுதிக தலைவரான விஜயகாந்த்தைச் சந்தித்துப் பேசினார்.
முதலில் விஜயகாந்த்தான் இந்த தலைவர்கள் சந்திப்பு படலத்தை ஆரம்பித்து வைத்தார். திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோரை நேரில் போய்ச் சந்தித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்துப் பேசி விட்டு வந்தார்.
அவரைத் தொடர்ந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது தம்பி மகன் திருமண அழைப்பைக் கொடுக்க ஒவ்வொரு தலைவராக சந்தித்துப் பேசினார்.

அடுத்து புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் தலைவர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார். அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனும் தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை சந்தித்த அவர் கூட்டணி ஆட்சி குறித்துப் பேசினார். இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்துப் பேசினார் அவர். காலை 11 மணிக்கு தொடங்கிய சந்திப்பு 12 மணி வரை நீடித்தது. இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வருகிற ஜூன் 9ந் தேதி தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் ஒரு கருத்தரங்கை நடத்துகிறது. அந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக விஜயகாந்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தேன். அவர் நாளை தனது பதிலை தெரிவிப்பதாக கூறினார்.
இனிவரும் காலங்களில் கூட்டணி ஆட்சி முறைதான் வரவேண்டும். ஒரு கட்சியில் ஒரு எம்.எல்.ஏ. இருந்தால்கூட அவருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்க வேண்டும். உத்தரபிரதேசம் இதற்கு முன்மாதிரியாக திகழ்கிறது.
மத்திய அரசில் 40 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சியே நடந்து வருகிறது. ஜனதா கூட்டணி, தேசிய முன்னணி கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி முறையே தொடர்ந்து வருகிறது.
கடந்த மாதம் விஜயகாந்த் தலைமையில் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தோம். ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி அவரிடம் அப்போது தெரிவித்தோம். அதுகுறித்து மத்திய அரசு ஏதும் தெரிவித்துள்ளதா என்று விஜயகாந்திடம் கேட்டேன்.
ஐ.ஐ.டி. மாணவர் பிரச்சனை குறித்து விவாதித்தோம். வாக்கு வங்கிக்கு மட்டும் கூட்டணி சேராமல் கூட்டணி ஆட்சியிலே பங்கு வேண்டும் என்பது குறித்து அவரிடம் வலுசேர்த்து பேசினேன். இதுபற்றி 2 கம்யூனிஸ்ட் தலைவர்களிடமும் பேசியுள்ளேன். அவர்கள் கருத்தரங்குக்கு வருவதாக கூறியுள்ளார்கள்.
இன்று இரவு 7 மணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்திக்க இருக்கிறேன். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்திக்கும் எண்ணம் இல்லை என்றார் அவர்.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications