வடிவேலு படத்தை போட்டு போஸ்டர் ஒட்டுங்க… அன்புமணியை கிண்டலடிக்கும் திருமாவளவன்
சென்னை: எப்படி பார்க்கணும் கூட சொந்தமா யோசிக்கமா ஒபாமா போஸ்டரைப் பார்த்து காப்பியடித்தது ஏன் என்று அன்புமணி ராமதாஸை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கிண்டலடித்துள்ளார். வடிவேலு படத்தைப் போட்டு போஸ்டர் ஒட்டுங்கள் தனது கட்சியினரிடம் கூறியுள்ளார் திருமாவளவன்.
ஞாயிறன்று ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என்ற வாசகங்களுடன் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது, அதே போஸ்டர் வாசகங்களுடன் அன்றைய நாளிதழ்களில் இரண்டு முழுப்பக்க விளம்பரங்களும் கொடுக்கப்பட்டிருந்தன.
இது ஏதோ சினிமா பட விளம்பரமோ என்று பலரும் குழம்பித்தான் போனார்கள். அப்புறம்தான் முதல்வர் வேட்பாளர் அன்புமணியை விளம்பரப்படுத்த ஒட்டப்பட்ட போஸ்டர் என்று புரிந்து கொண்டனர் தமிழக மக்கள். சும்மாவே சந்தில் சிந்து பாடுவார்கள் நம் வலைஞர்கள், ஞாயிறன்று நல்ல மேட்டர் கிடைக்கவே பிரித்து மேய்ந்து விட்டார்கள்.

ஒபாமாவை காப்பியடித்து
'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி'- என்ற விளம்பரத்தைக் கூட சொந்தமாக சிந்தித்து உருவாக்க தெரியவில்லையே என்றும், அந்த வாசகமும், போஸ்டர் டிசைனும் எங்கிருந்து சுடப்பட்டது என்பதையும் ஒபாமா போஸ்டர் படத்துடன் போட்டு ஃபேஸ்புக்கில் செமையாக வாரி உள்ளார்கள்.

சொந்தமா யோசிங்கப்பா
இதுபோக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் தனது பங்கிற்கு அடித்து ஆடினார். ஒரு போஸ்டரை கூட சொந்தமா யோசிக்க மாட்டாங்களா? எப்படி பார்க்கணும்னு கூட ஒபாமாவை பார்த்து காப்பியடிக்கணுமா என்று கேட்டுள்ளார் திருமாவளவன்.

காப்பியடிக்கிறாங்க
தொடர்ந்து பேசிய திருமாவளவன், அமெரிக்காவில் கடந்த முறை நடைபெற்ற தேர்தலின் போது ஒபாமா ஒரு போஸ்டரை வெளியிட்டார் அதை பார்த்து அப்பட்டமாக காப்பியடிக்கணுமா? மூணு படம் இருக்கு, அதுல ஹோப், புராகரஸ், சேஞ்ச் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஒபாமா கூட ஒபாமான்னு எழுதல, சேஞ்சுன்னுதான் எழுதியிருக்கு.

நம்பிக்கை, வளர்ச்சி, மாற்றம்
அந்த போஸ்டரில் எழுதியுள்ள நம்பிக்கை, வளர்ச்சி, மாற்றம் ஆகியவற்றை ஒபாமாவினால் செய்ய முடியும் என்று தெரிவிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. உடனே அன்புமணியும் ஒரு போஸ்டரை போட்டு அப்படி பார்க்கிறார். ஒருதடவை மத்திய அமைச்சர் ஆனதுக்கே சிபிஐக்கு போயிட்டு இருக்கார்.

சிறப்பான மாற்றம்
ஏன் தெரியுமா? சிறப்பான மாற்றம் சிறப்பான முன்னேற்றம் கொடுத்த காரணத்தால் சிபிஐ வழக்கு போடப்பட்டுள்ளது. முதல்வராக ஒரே ஒரு வாய்ப்பு கேட்கிறார்.

வடிவேலு ஆசைப்படக்கூடாதா?
அன்புமணி ஆசைப்படும் போது வடிவேலு ஆசைப்படக்கூடாதா? நாளைக்கு எல்லாரும் வடிவேலு படத்தைப் போட்டு மாற்றம் முன்னேற்றம் வடிவேலு என்று போஸ்டர் ஒட்டுங்க என்று கூறியுள்ளார் திருமாவளவன்.
இது எங்க போயி எப்படி முடியப்போகுதோ தெரியலையே?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications