பொதுசிவில் சட்டத்துக்கு ஆதரவாக குஷ்பு கருத்து... திருமா 'ஷாக்'
பாஜக அரசின் பொதுசிவில் சட்டத்தை ஆதரிப்பதாக காங்கிரஸின் குஷ்பு கருத்து தெரிவித்து அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: பொதுசிவில் சட்டத்தை ஆதரிப்பதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியுள்ளது அதிர்ச்சி தருகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
புதுச்சேரி மக்கள் நலக் கூட்டணியைப் பொறுத்தவரை அந்தந்த கட்சிகள் தனித்து முடிவெடுக்கலாம். ஆகையால் நாங்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தோம்.

புதுவை முதல்வராக நாராயணசாமி நீடிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் நலக் கூட்டணியின் முடிவுகளின் படி செயல்படுவோம்.
மநகூ ஒருங்கிணைப்பாளராக வைகோ சிறப்பாகத்தான் செயல்படுகிறார்; இதில் எந்த குழப்பமும் இல்லை.
பொதுசிவில் சட்டத்தை ஆதரிப்பதாக நடிகை குஷ்பு கூறியுள்ளது அதிர்ச்சி தருகிறது. யாரேனும் அவருக்கு தவறான தகவலை கூறியிருப்பார்கள். அதைக் கேட்டு அப்படி அவர் சொல்லியிருக்கலாம்.
ஒவ்வொரு சமூகத்துக்கும் தனிச் சட்டங்கள் உள்ளன. அதை பாதுகாக்க வேண்டும். பொதுசிவில் சட்டம் என்பது சிறுபான்மையினருக்கு எதிரானது.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications