பாஜகவும், காங்கிரஸும் வெறும் பேச்சு மட்டும் தான், செயலில் ஒன்னும் கிடையாது: திருமாவளவன்
சென்னை: பாஜகவும் சரி, காங்கிரஸும் சரி அதிகமாக பேசுவார்களே தவிர செயலில் எதுவும் இருக்காது. ஏனென்றால் எதுவாக இருந்தாலும் டெல்லியில் இருக்கும் கட்சி தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.ஏழுமலையை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில்,

கூட்டணி ஆட்சி
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். அப்படி செய்தால் தான் ஒரு கட்சி ஆட்சி மாறி கூட்டணி ஆட்சி அமையும். இதுவே எங்கள் கூட்டணியின் லட்சியம் ஆகும்.

மதுவிலக்கு
கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்தில் ஊழலை அழிக்க முடியும். மதுவிலக்கை அமல்படுத்த முடியும். மது ஆலைகளை நடத்தி வரும் திமுக, அதிமுகவால் மதுவிலக்கை நிச்சயம் கொண்டு வர முடியாது. படிப்படியாக மது விலக்கை அமல்படுத்துவதாக அதிமுக கூறுவது ஏமாற்று வேலை ஆகும்.

ஊழல்
மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும் என்று நாங்கள் அறிவித்தோம். அதை பார்த்து தான் திமுகவும், அதிமுகவும் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

பேச்சு தான்
பாஜகவும் சரி, காங்கிரஸும் சரி அதிகமாக பேசுவார்களே தவிர செயலில் எதுவும் இருக்காது. ஏனென்றால் எதுவாக இருந்தாலும் டெல்லியில் இருக்கும் கட்சி தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களாக எதுவும் செய்ய முடியாது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications