காவிரி பிரச்சனை: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுக; திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை: காவிரி பிரச்சினை தொடர்பாக அடுத்த நடவடிக்கை குறித்து ஒருமித்த முடிவை மேற்கொள்ளும்வகையில் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரியில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் பத்து நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிடவேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு காவிரியில் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமையை அங்கீகரித்துள்ளது என்றபோதிலும், தமிழகத்துக்கு சட்டப்படி சேரவேண்டிய தண்ணீரில் அது கால்வாசிகூட இல்லை.

இந்தத் தண்ணீரைக்கொண்டு தற்போது டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் நாற்பதாயிரம் ஏக்கர் சம்பா பயிரைக் காப்பாற்ற முடியாது. இந்தத் தீர்ப்பு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ஆனால் இந்தத் தண்ணீரைக்கூடத் தரக்கூடாது என கன்னட இனவெறி அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. கர்நாடக பந்த்துக்கும் அழைப்புவிடுத்துள்ளன. இந்த இனவெறிப்போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் தரவேண்டிய நீரின் அளவை காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் வரையறுத்துள்ளது. ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி., ஜூலையில் 34, ஆகஸ்டில் 50 டி.எம்.சி., செப்டம்பரில் 40 டி.எம்.சி., அக்டோபரில் 22 டி.எம்.சி., நவம்பரில் 15 டி.எம்.சி., டிசம்பரில் 8 டி.எம்.சி., ஜனவரியில் 3 டி.எம்.சி., பிப்ரவரி மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தலா 2.5 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாடுக்கு அளிக்கப்பட வேண்டும் என நடுவர் மன்றம் கூறியுள்ளது. ஆனால் இந்த அட்டவணைப்படி இதுவரை ஓர் ஆண்டில்கூட கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டதில்லை.
ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் வரை தமிழகத்துக்கு 134 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த அளவைக்கூட வலியுறுத்தாமல் சம்பா பயிரைக் காப்பாற்ற வெறும் 50.52 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்றுதான் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது.
உச்ச நீதிமன்றமும் கர்நாடக அரசைக் கடிந்துகொண்டது. உயிர்ப்பிச்சை போடுவதுபோல் 13 டிஎம்சி தண்ணீர் தர ஆணையிட்டது. ஆனால் காவிரி நடுவர் மன்ற உத்தரவையோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையோ மதிக்காமல் இனவெறி நெருப்பில் குளிர்காய கர்நாடக அரசு முயற்சிக்கிறது. இது மிகவும் ஆபத்தான அணுகுமுறை என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்து கர்நாடக அரசு இன்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்ட 13 டிஎம்சி தண்ணீரைக்கூட கர்நாடகம் தரப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்நிலையில் அடுத்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து ஒருமித்த முடிவை மேற்கொள்ளும்வகையில் தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications