மீண்டும் சிறையில் மயங்கி விழுந்தார் திருமுருகன் காந்தி.. வேலூர் மருத்துவமனையில் அனுமதி!
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சிறையில் இன்று திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video

வேலூர்: மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சிறையில் இன்று திடீரென மயங்கி விழுந்ததால் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டுக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு செய்துவிட்டு கடந்த மாதம் ஆகஸ்ட் 9-ம் தேதி திரும்பினார். பெங்களூர் விமான நிலையம் வந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்பினரும் அவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே மயக்கம்
திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு ஒன்றரை மாதம் ஆகியுள்ள நிலையில் இரத்த அழுத்தம் குறைவு காரணமாக கடந்த 23ஆம் தேதி சிறையில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து கடந்த 24ஆம் தேதி காலை போலீசார் அவரை வேலூர் அருகே உள்ள அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.

மீண்டும் மயக்கம்
பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை திருமுருகன் காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மீண்டும் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதி
இதைத்தொடர்ந்து அவருக்கு சிறையில் மருத்துவ பரிசோதனை அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் திருமுருகன் காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டு
ஏற்கனவே தனது ஆரோக்கியமின்மை தொடர்பாக திருமுருகன் காந்தி, தன்னை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு மயிலாடுதுறை, ஆலந்தூர், எழும்பூர் போன்ற நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நீதிபதிகள் அனுமதி அளித்தும் போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லவில்லை. இதனிடையே திருமுருகன் காந்தி உயிருக்கு சிறையில் ஆபத்து இருப்பதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications