For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருநாவுக்கரசர் தலைமையில் சென்னையில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

சென்னையில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெறுகிறது.

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் நாளை மாலை திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றம் நாளை மறுநாள் கூடுவதால், அதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Thirunavukkarasar to lead the Congress MLA meeting Tomorrow

சமீபகாலமாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துக்கொண்டு வருகிறது. இதனை தேசிய கட்சியான காங்கிரஸ் உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், தேசிய அளவில் எதிரானவர்கள் கூட மாநில அளவில் நல்ல நட்புறவில் உள்ளதால், யாரை எதிர்ப்பது யாரை ஆதரிப்பது உள்ளிட்ட முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் என்று கருதப்படுகிறது.

மேலும் திருநாவுக்கரசரின் நண்பர் ரஜினிகாந்த் நீண்ட ஆண்டுகளுக்கு பின் அரசியலில் இறங்கியுள்ளதால், அவருடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் முயற்சிக்குமா என்ற கேள்வியும் அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.

English summary
Thirunavukkarasar to lead the Congress MLA meeting Tomorrow. As the TN Assembly session is to begin on 8th, it is considered that important topics will be discussed in the meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X