ஸ்டாலினை தொடர்ந்து ஆளுநரை சந்தித்த திருநாவுக்கரசர்- எஸ்சி, எஸ்டி சட்ட திருத்தத்துக்கு வலியுறுத்தல்!
தமிழக ஆளுநரை சந்திக்கிறார் திருநாவுக்கரசர்.
Recommended Video

சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலினைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது எஸ்.சி, எஸ்.டி. சட்ட திருத்தம் தொடர்பாக ஆளுநரிடம் மனு கொடுத்ததாக திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
ஆளுநரின் மாவட்ட ஆய்வுகளை திமுக கடுமையாக எதிர்ப்பு கருப்பு கொடி போராட்டம் நடத்தி வருகிறது. துணைவேந்தர்கள் நியமனம் குறித்தும் குற்றச்சாட்டுகளை திமுக முன்வைத்து வருகிறது.

இந்த நிலையில் திடீரென திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். இச்சந்திப்பில் மாவட்ட ஆய்வுகள், துணைவேந்தர் நியமனம் குறித்து ஆளுநர் விளக்கம் தந்ததாக ஸ்டாலின் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் ஆளுநர் பன்வாரில் புரோஹித்தை சந்தித்து பேசினார். இச்சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், எஸ்சி எஸ்டி சட்ட திருத்தம் தொடர்பாகவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஆளுநரை சந்தித்ததாக கூறினார்.
@INCTamilNadu தலைவர் திரு @ThiruArasarINC அவர்கள் மேதகு தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித் அவர்களை கவர்னர் மாளிகையில் இன்று காலை 11.30 மணிக்கு சந்திக்கிறார். pic.twitter.com/nae9tSoZRS
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) March 30, 2018
மேலும் கூட்டுறவு மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தியதாகவும் திருநாவுக்கரசர் கூறினார்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications