திருநின்றவூர் ஏரியின் மதகுகள் திறப்பு: குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சி- விவசாயிகள் எதிர்ப்பு
திருவள்ளூர்: திருநின்றவூரில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்றும் வகையில் போலீஸ் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று ஏரியின் மதகை திறந்து தண்ணீரை வெளியேற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் தண்ணீருக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் - ஆவடி நெடுஞ்சாலையில் உள்ளது திருநின்றவூர் பேரூராட்சி. திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னை புறநகர் தொடங்கும் பகுதியாக உள்ளது இந்த பேரூராட்சி. இந்தப் பேரூராட்சியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். திருநின்றவூரில் ரயில் நிலையம் அருகே சுமார் 835 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் பல பகுதிகள் தற்போது குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளன.
திருநின்றவூர் பேரூராட்சி 12, 13ம் வார்டு பகுதியில், கடந்த 1994ம் ஆண்டு உலக வங்கி நிதியுதவித் திட்டத்தின் கீழ், திருநின்றவூர் பெரிய ஏரியின் ஒரு பகுதி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வசம் எடுக்கப்பட்டு, அங்கு சாலைகள், குடிநீர், மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து, வீட்டு மனைகளாக மாற்றப்பட்டது. பின்னர் இந்த இடத்துக்கு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் அங்கீகாரமும் பெறப்பட்டு, 1994ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது 500 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. அப்பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தினர் வரி வசூலிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது அப்பகுதி முத்தமிழ் நகர், பெரியார் நகர் என்று பெயரிடப்பட்டு குடியிருப்புப் பகுதியாக உள்ளது. இதை ஒட்டியுள்ள பகுதிகளான சுதேசி நகர், திருவேங்கடம் நகர், கன்னிகாபுரம் ஆகிய பகுதிகள் வார்டு எண் 10, 11-ல் இணைகின்றன. தற்போது மேற்கண்ட 4 நகரப் பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் 8,000 பேர் வசித்து வருகின்றனர்.
2005ம் ஆண்டில் வடகிழக்கு பருவமழையின்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது திருநின்றவூர் பெரிய ஏரி நிரம்பி, குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தவித்த மக்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறி வெளியிடங்களில் தங்கினர். பலர் வாடகை வீடுகளில் குடியேறினர்.
மழை நின்று ஒரு மாதமாகியும் வெள்ளம் வடியாததால், இப்பகுதி மக்கள் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் நாடினர். ஆனால் அனைவரும் இப்பகுதி ஏரி ஆக்கிரமிப்பு என்று கூறி, இப்பகுதியைப் புறக்கணித்தனர்.

வடியாத வெள்ளநீர்
இந்நிலையில் அண்மையில் சென்னையில் பெய்த பெருமழையில் ஏரி நிரம்பி குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இன்று வரை இப்பகுதியில் வெள்ளம் வடியவில்லை. இதற்குக் காரணம், ஏரியின் மேற் பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் வெள்ளம் வடியா முடியாத நிலை ஏற்பட்டது.

வடியவைக்க நீர் திறப்பு
இதனால் ஏரியைத் திறந்து தண்ணீரை வெளியேற்றனால்தான் மேலே தேங்கிய நீர் ஏரிக்குள் சென்று குடியிருப்புகளில் வெள்ளம் வடியும் என்ற நிலை ஏற்பட்டது. இங்கு வசிக்கும் மக்கள் பரிதவித்து வந்தனர். பள்ளிகள் திறக்கும் வரை மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் இப்பகுதி மக்கள் தங்கி வந்தனர். பள்ளித் திறப்புக்குப் பின்னர் இவர்கள் தங்க மாவட்ட நிர்வாகத்தினர் எந்த மாற்று ஏற்பாடும் செய்யவில்லை. ஏரி நீரை திறந்து விடக்கோரி குடியிருப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் குற்றச்சாட்டு
ஏரியின் மதகுகளை திறந்துவிட்டால்தான் குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் நீர் வெளியேறும் நிலை உள்ளது. ஆகையால், ஏரியின் மதகுகளை திறந்து விட வேண்டும் என ஒரு பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆனால், ஏரியின் நீரை திறந்துவிட்டால் நீர் வீணாகிவிடும், விவசாயம் செய்ய முடியாது என இப்பகுதி விவசாயிகள் கூறி வந்தனர்.
முத்தமிழ் நகர், கன்னிகாபுரம் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் ஏரியை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டதால், ஏரியைத் தான் மீட்க வேண்டுமே தவிர, நீரை வெளியேற்றி, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களை காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது என்பது விவசாயிகளின் கருத்தாகும்.

பொதுநல மனு தாக்கல்
இதுதொடர்பாக திருநின்றவூரைச் சேர்ந்த விவசாயி டி.கே.தேவேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில்,
திருநின்றவூர் ஏரியை ஆக்கிரமித்து பலர் வீடுகளைக் கட்டியுள்ளனர். மேலும், இந்த ஏரி நிலத்துக்குள் முத்தமிழ்நகர், பெரியார் நகர், சுதேசிநகர் என்று பெயர் சூட்டி, பலர் வீடுகளைக் கட்டி குடியிருந்து வருகின்றனர். தற்போது இந்த வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால், ஏரியை உடைக்க அப்பகுதி மக்கள் முயற்சிக்கின்றனர். இந்த ஏரியில் உள்ள நீரைக் கொண்டுதான் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும். ஆனால், ஏரியை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளவர்கள், நீரைத் தேங்க விடாமல் ஏரியை உடைத்துவிட முயற்சிக்கின்றனர். எனவே, திருநின்றவூர் ஏரி தண்ணீரைத் திறந்து விடக் கூடாது என்று மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதிகள் உத்தரவு
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர்அடங்கிய முதல்பெஞ்ச் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு: பொதுப்பணித் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஏரி பகுதியில் குடியிருப்புகள் கட்ட, குடிசை மாற்று வாரியத்துக்கு, இடம் ஒதுக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு உள்ளனர். இதுதவிர, புதிதாக குடிசைகள் அங்கு முளைத்துள்ளன. ஏரியின் கொள்ளளவு, 149 மில்லியன் கனஅடி; தற்போது, 139 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரி கரையின் உயரம், 12 அடி; தண்ணீர் மட்டம், 11 அடியில் உள்ளது. தண்ணீரை திறந்து விடவில்லை என்றால், ஏரிக்கே ஆபத்து என, கூறப்பட்டு உள்ளது.

விதி மீறல்
எந்த அளவுக்கு விதிமீறல் நடந்துள்ளது என்பதற்கு, இது ஒரு உதாரணம். அரசின் நிர்வாக நடவடிக்கையில், நாங்கள் தலையிட விரும்பவில்லை. அவர்கள் ஏற்படுத்திய குழப்பத்தை, நிர்வாகம் தான் தீர்த்து கொள்ள வேண்டும். விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும். ஏரியில் உள்ள தண்ணீர், எதிர்கால தேவைக்கும் பயன்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதேநேரத்தில், ஏரி கரைக்கு ஆபத்து என்றால், தேவையான முன்னெச்சரிக்கையை எடுக்க வேண்டும். இதை எப்படி செய்வது என்பதை, நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ஏரி நீர் திறப்பு
திருநின்றவூரில் ஏரி தண்ணீரை திறப்பதில் அரசியல் உள்ளதாக பாஜக, திமுக உள்ளிட்ட கட்சித்தலைவர்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில்
திருநின்றவூரில் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ள நீர் வடிவதற்காக எரியின் மதகுகள் திறக்கப்பட்டது. விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஏரியை திறந்தனர்.

விவசாயிகள் போராட்டம்
இதனிடையே ஏரி தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏரி திறப்பதைக் கண்டித்து மதகுகளின் முன்பாக நின்று ஏராளமான பெண்களும், விவசாயிகளும் தண்ணீரில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளை கலந்தலோசிக்காமல் ஏரி நீரை அரசு திறந்து விடுவதாக புகார் கூறிய விவசாயிகள், ஏரியில் இருந்து மதகுகள் வழியாக வினாடிக்கு 50 கன அடி நீர் வெளியேற்றுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

விவசாயம் பாதிப்பு
கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மழையால் ஏரி நிரம்பியுள்ளது. இந்த நிலையில் ஆக்கிரமிப்பாளர்களுக்காக ஏரி நீரை வெளியேற்றினால், விவசாயம் பொய்துப்போகும் என்று குற்றம் சாட்டியுள்ள விவசாயிகள், நாங்கள் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள நேரிடும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

மாறி மாறி புகார்
ஏரியை திறந்து விட்டு தண்ணீரை வெளியேற்றக்கோரி ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று ஏரி திறக்கப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications