திருப்பரங்குன்றத்திலும் அதிமுக வெற்றி.. 42,670 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடினார் ஏ.கே.போஸ்
திருப்பரங்குன்றத்தில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் முன்னிலையில் இருந்த அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் 21வது சுற்றில் வெற்றி வாகை சூடினார்.
மதுரை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் தன்னை எதிர்த்து போட்டியிட்டுள்ள திமுக வேட்பாளர் சரவணனை விட 42,670 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
திருப்பரங்கும் இடைத்தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பதிவான வாக்குகளில் 2 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. அதிமுக வேட்பாளர் போஸ் தபால் ஓட்டில் 44 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் 1 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றார்.

முதல் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸ் 9092 வாக்குகளும் திமுக வேட்பாளர் சரவணன் 6681 வாக்குகள் பெற்றார். ஒவ்வொரு சுற்றிலும் அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸ் திமுக வேட்பாளர் சரவணனை விட முன்னிலை பெற்றே காணப்பட்டார்.
5 சுற்று முடிவில் அதிமுகவின் ஏ.கே. போஸ் 23,716 வாக்குகளும், திமுகவின் சரவணன் 18274 வாக்குகளும் பெற்றனர். சரவணனை விட 5542 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார் ஏ.கே. போஸ். தொடர்ந்து முன்னிலை 10வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸ் 51,309 வாக்குகளும் திமுக வேட்பாளர் சரவணன் 34, 348 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
14வது சுற்று முடிவில் அதிமுகவின் ஏ.கே. போஸ் 72213 வாக்குகளும், திமுகவின் சரவணன் 47417 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
15வது சுற்று முடிவில் ஏ.கே.போஸ் 78610 வாக்குகளும், சரவணன் 50,866 வாக்குகளும் பெற்றிருந்தனர். ஏ.கே.போஸ் 27744 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். 16வது சுற்று முடிவில், ஏ.கே.போஸ் 84683 வாக்குகளும், சரவணன், 53522 வாக்குகளும் பெற்றிருந்தனர்.இது 31161 வாக்குகள் முன்னிலையாகும்.
19வது சுற்று முடிவில், ஏ.கே.போஸ் 39543 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். ஏ.கே.போஸ் 102549 வாக்குகளும், திமுக வேட்பாளர் சரவணன் 63000 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
21வது சுற்றில் மொத்த வாக்குகளும் எண்ணப்பட்டன. அப்போது, ஏ.கே.போஸ், 42,627வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் மொத்தம் 1,13032 வாக்குகள் பெற்றார். சரவணன், 70362 வாக்குகளை பெற்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications