திருப்பரங்குன்றத்தில் தபால் வாக்குகளில் முறைகேடு: திமுக புகாரை வாங்க மறுத்த தேர்தல் அதிகாரி
மதுரை: திருப்பரங்குன்றத்தில் தபால் வாக்குகளில் அதிமுக முறைகேடு செய்துள்ளதாக திமுக வேட்பாளர் அளித்த புகாரை வாங்க தேர்தல் அதிகாரி மறுத்துள்ளார்.
திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் கடந்த 19ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.கே. போஸ் மற்றும் திமுக சார்பில் டாக்டர் சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர்.
தேர்தலில் பதிவான வாக்குகள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் வைத்து இன்று எண்ணப்பட்டு வருகின்றது. வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு துவங்கியது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான 48 தபால் வாக்குகளில் அதிமுகவுக்கு 44 கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக வேட்பாளர் சரவணன் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார்.
அவர் தனது புகாரில் கூறியிருப்பதாவது,
தேர்தல் அதிகாரி வீரராகவராவ் தபால் வாக்குகளில் 2 வாக்குகள் பதிவாகியுள்ளது என்றார். இன்று காலை முதலில் 34 வாக்குகள் பதிவானதாக கூறினார். சிறிது நேரத்தில் பெட்டி ஒன்றை கொண்டு வந்து 48 வாக்குகள் பதிவாகியுள்ளது என்றார்.
தபால் வாக்குகளில் பெரும்பாலானவற்றில் ஒரு குறிப்பிட்ட மையால் ஒரே மாதிரி டிக் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏதோ முறைகேடு நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் அதிகாரி சரவணனின் புகாரை வாங்க மறுத்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications