திருவள்ளுவர் தினம்: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தருண் விஜய் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை: திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் உலகின் பலநாடுகளில் அவர்களது மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு உலகையே வலம் வருவதால் உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிறது.
திருக்குறளை தனி ஒரு மனிதனாக, அனைத்து தரப்பு மனிதர்களுக்கும் பயன்படும் வகையில் இயற்றிய திருவள்ளுவரை தெய்வப்புலவர் என்று அழைக்கின்றனர்.

திருவள்ளுவர் சென்னை மயிலாப்பூரில் பிறந்தவர் என்று கூறப்படுகிறது. திருவள்ளுவர் அவரது மனைவி வாசுகிக்கு சென்னை மயிலாப்பூரில் ஆலயம் உள்ளது. உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரைப் போற்றும்வகையில், தமிழகத்தில் தை 2ஆம் தேதி வள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னையில், வள்ளுவர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்தனர். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர்கள், நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சென்னை பெசன்ட் நகர் பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு உத்தரகாண்டை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. தருண் விஜய், கவிஞர் வைரமுத்து ஆகியோர் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.
மெரீனா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவரின் படத்துக்கு பா.ஜ.க எம்.பி, தருண் விஜய் தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications