திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு 16ம் தேதி லீவாம்!
சென்னை: வரும் 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தாண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மறுநாள் ஜனவரி 16ம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் வருகிறது. வழக்கமாக திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள், பார்கள் இயங்காது.

இந்நிலையில் சென்னை கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவள்ளுவர் தினத்தன்று எப்.எல்.2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்.எல்.3 உரிமம் கொண்ட ஹோட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3(ஏ) உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும்.
அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால், மதுபான விதிமுறைகளின்படி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதே போல பல்வேறு மாவட்ட நிர்வாகங்களும் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
மேலும் 24ம் தேதி வள்ளலார் தினம், 26ம் தேதி குடியரசு தினத்தையொட்டி அந்த நாட்களிலும் டாஸ்மாக் கடைகள் இயங்காது.
-
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications