அதிமுக சீனியர்கள் களமிறங்கும் திருவண்ணாமலை
திருவண்ணாமலை: சட்டசபை தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்சியில் சீனியர்களாக இருப்பவர்கள் அதிமுக வேட்பாளர்களாக திருவண்ணாமலையில் களமிறங்கியுள்ளனர்.
பெருமாள் நகர் கே.ராஜன்
திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பெருமாள் நகர் கே.ராஜன் (வயது 54), திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் ஆவார். அகமுடைய முதலியார் சமூகத்தைச் சேர்ந்த இவர், தொழிலதிபராவார். இவரின் கல்வித் தகுதி பி.ஏ., ஆகும்.
க.செல்வமணி
கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள க.செல்வமணி (வயது 53), வேட்டவலம் நகரச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இவர், எம்.ஏ பட்டதாரி ஆவார்.
தூசி கே.மோகன்
செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளர் தூசி கே.மோகன் (வயது 53) நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர். வெம்பாக்கம் ஒன்றிய அதிமுக செயலர், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளை இவர் வகித்துள்ளார். பி.பி.ஏ. பட்டதாரியான இவர், பட்டுச் சேலை உற்பத்தி, விவசாயமும் செய்து வருகிறார்.
சேவூர் எஸ்.இராமச்சந்திரன்
ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சேவூர் எஸ்.இராமச்சந்திரன், (வயது 56) ஜெயலலிதா பேரவை திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். செங்குந்த முதலியார் சமூகத்தைச் சேர்ந்த இவர், மேல்நிலைக் கல்வி வரை பயின்றுள்ளார். விவசாயமும் செய்து வருகிறார்.
வி.பன்னீர்செல்வம்
கலசப்பாக்கம் தொகுதி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம், (வயது 43) மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்து வருகிறார். இந்து அகமுடையார் இனத்தைச் சேர்ந்த இவர், நூற்பாலை அதிபராகவும் உள்ளார். மேல்நிலைக் கல்வி பயின்றுள்ளார்.
மு.தினகரன்
செங்கம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மு.தினகரன், (வயது 49) மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி பொருளாளராக உள்ளார். இந்து ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த இவர், எம்ஏ.,பி.எல்., முடித்து வழக்குரைஞராகவும் பணியாற்றுகிறார். இவர் தனது மகளுக்கு குட்டி ஜெயலலிதா என்று பெயர் வைத்துள்ளார்.
சி.எம்.முருகன்
போளூர் சட்டசபை தொகுதி வேட்பாளர் சி.எம்.முருகன், ( வயது 43 ) அதிமுக போளூர் தொகுதி செயலராகவும், சேத்துப்பட்டு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். எம்.ஏ.,எம்.ஃபில்., முடித்துவிட்டு விவசாயமும் செய்து வரும் இவர், இந்து அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவராவார்.
வி.மேகநாதன்
வந்தவாசி தனித்தொகுதி அதிமுக வேட்பாளர் வி.மேகநாதன், (வயது 54) அன்னை சத்யா மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தில் கணக்காளராக உள்ளார். பி.ஏ. பட்டதாரியான இவர், ஜெயலலிதா பேரவை வந்தவாசி நகரச் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications