2 முன்னாள் அமைச்சர்களுடன் களம் காணும் திமுக.. திருவண்ணாமலை மாவட்ட வேட்பாளர்கள் பயோடேட்டா
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 முன்னாள் அமைச்சர்களை களம் இறக்கியுள்ளது திமுக. அவர்கள் எ.வ.வேலு மற்றும் கு. பிச்சாண்டி ஆகியோர்.
வேலு திருவண்ணாமலையில் நிற்கிறார். பிச்சாண்டி கீழ்ப் பென்னாத்தூர் தொகுதியில் களம் காண்கிறார்.
திருவண்ணாமலை மாவட்ட திமுக வேட்பாளர்களின் பயோடேட்டா.
எ.வ.வேலு
திருவண்ணாமலையில் மீண்டும் போட்டியிடுகிறார் எ.வ.வேலு. 61 வயதான இவரது சொந்த ஊர் தண்டாரம்பட்டு அருகில் உள்ள சே. கூடலூர் கிராமம் ஆகும். கல்வித் தொழிலதிபராக வலம் வருபவர் வேலு. இதுதவிர திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் என கட்சியிலும் முக்கியஸ்தராக உள்ளார்..
எஸ்.பாபு
ஆரணி தொகுதியில் போட்டியிடுகிறார் எஸ்.
பாபு. 28 வயதேயான இளைஞரான இவர் அரிசி ஆலை அதிபர் ஆவார். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளராக இருக்கிறார். இவரது தந்தை ஆர். சிவானந்தம், 2 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர் ஆவார்.
கே.வி.சேகரன்
போளூர் தொகுதியில் கே.வி.
சேகரன் போட்டியிடுகிறார். 59 வயதான இவர் படித்தது 10ம் வகுப்பு வரை மட்டுமே. காங்கேயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாயி, காண்டிராக்டர் என வேறு முகங்களும் இவருக்கு உள்ளன. அகமுடையார் வகுப்பைச் சேர்ந்த இவர் ஒன்றியச் செயலாளராக இருக்கிறார்.
அம்பேத்குமார்
வந்தவாசி (தனி) தொகுதியில் போட்டியிடும் 39 வயது இளைஞர்
அம்பேத்குமார், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். சொந்த ஊர் வந்தவாசி வட்டத்திற்குட்பட்ட அராசூர் கிராமம். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளராக கட்சியில் பதவி வகிக்கிறார்.
கு.பிச்சாண்டி
கீழ்பென்னாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் முன்னாள் அமைச்சர் கு.
. 62 வயதான இவரது சொந்த ஊர் திருவண்ணாமலையாகும். திமுகவில் தணிக்கைக் குழு உறுப்பினராக இருக்கிறார்.
மு.பெ.கிரி
செங்கம் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார் மு.பெ.
. 40 வயதான இவர் பிளஸ்டூ படித்தவர். பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளராக இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications