சார் ஆசையை நிறைவேற்று.. லெவலே மாறிடும்... மாணவியை பிரெய்ன்வாஷ் செய்யும் 2 உதவி பேராசிரியைகள்
திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் மாணவியை உதவி பேராசிரியரின் ஆசைக்கு இணங்குமாறு விடுதி வார்டன்கள் பேசும் பேச்சு வைரலாகியுள்ளது.
Recommended Video

திருவண்ணாமலை: அரசு வேளாண் கல்லூரியில் மாணவியை உதவி பேராசிரியரின் ஆசைக்கு இணங்குமாறு விடுதி வார்டன்கள் பேசும் பேச்சு வைரலாகியுள்ளது.
சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வாழவச்சனூரில் உள்ள தமிழ்நாடு அரசு வேளாண் கல்லூரி விடுதியில் தங்கி பி.எஸ்சி 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் கல்லூரி உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக புகார் அளித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரவு முழுவதும் கல்லூரி விடுதிக்கு வரும் உதவி பேராசிரியர் தன்னுடன் படுக்கையை பகிருமாறு வற்புறுத்துவதாகவும் இதுதொடர்பாக விடுதி வார்டன்களான மைதிலி மற்றும் புனிதாவிடம் புகார் அளித்தார் மாணவி.

விடுதியில் உதவி பேராசிரியர்
இரவு முழுவதும் கல்லூரி விடுதிக்கு வரும் உதவி பேராசிரியர் தன்னுடன் படுக்கையை பகிருமாறு வற்புறுத்துவதாகவும் இதுதொடர்பாக விடுதி வார்டன்களான மைதிலி மற்றும் புனிதாவிடம் புகார் அளித்தார் மாணவி.

வார்டன்கள் பிரெய்ன் வாஷ்
ஆனால் வாடர்ன்களோ தங்கபாண்டியன் சாரின் ஆசையை நிறைவேற்று எனக் கூறி மாணவியை பிரெய்ன் வாஷ் செய்துள்ளனர். இது ஒரு சின்ன மேட்டர், தங்கபாண்டியன் சாரின் ஆசையை நிறைவேற்றிவிட்டு அமைதியாக எல்லாவற்றையும் மறந்துவிடு.

செட்டிலாகிவிடலாம்
தங்கபாண்டியன் உன்னை அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வைப்பதுடன், பெரிய லெவலுக்கு கொண்டு போவார். இதே கல்லூரியிலேயே நீ பேராசிரியராக வரலாம். அவருக்கு ரெண்டாம் தாரமாகவும் ஆகி வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம்' என்றும் மாணவியிடம் பேசி வலை விரித்துள்ளனர்.
அட்ஜஸ் செய்.. மறந்துவிடு..
மேலும் ஒரு நாள் தங்கபாண்டியன் சாருடன் அட்ஜஸ்ட் செய்துவிட்டு நடந்தவற்றை மறந்துவிடு என்றும் விடுதி வார்டன்கள் தெரிவித்துள்ளனர். எத்தனையோ பேர் இதுபோல் இருந்துவிட்டு இப்போது வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்கள் என்றும் கூறியுள்ளனர்.
மாணவிக்கு மிரட்டல்
நீ என்ன புகார் கொடுத்தாலும் உன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுவோம், உனக்கு எதிராக ஆதாரங்ளை நிரூபிக்க முடியும் என்றும் வார்டன்கள் மாணவியை மிரட்டியுள்ளனர். பெரிய டிஜிபியே ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் உனது பெற்றோர் கேட்டால் நீ வரவே இல்லை என்றும் கூறிவிடுவோம் என தெனாவட்டாக பேசியுள்ளனர் வார்டன்கள்.
வைரலாகும் ஆடியோ
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விவகாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அந்த பயம் கொஞ்சமும் இன்றி விடுதி வார்டன்களாக உள்ள புனிதாவும் மைதிலியும் மாணவியை உதவி பேராசிரியரின் ஆசைக்கு இணங்குமாறு கூறியிருக்கும் ஆடியோ வைரலாகியுள்ளது. விடுதி வார்டன்களாக உள்ள புனிதாவும் மைதிலியும் அக்கல்லூரியில் பேராசிரியர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications