எங்கு போனாலும் குழி பறிக்கத்தான் பார்ப்பார் ராமதாஸ்.. இது 2009ல் கருணாநிதி கூறியது!
சென்னை: டாக்டர் ராமதாஸ் எந்த இடத்திற்குப் போனாலும், அந்த இடத்தில் குழி பறிக்கத்தான் பார்ப்பார் என்று 2009ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் திமுக தலைவர் கருணாநிதி சாடியிருந்தார்.
அந்த பிளாஷ்பேக்...
"மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் ஆட்சி மாறும் என்று நான் கூறியதை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் ஆட்சியில் அமர வேண்டும், காமராஜரின் ஆட்சி மீண்டும் உருவாக வேண்டும் என்பது தமிழகத்தில் பெரும்பான்மையான காங்கிரஸ்காரர்களின் கனவு. அவர்களின் கனவு நிறைவேற வேண்டும் என்றுதான் கூறினேன்'' -டாக்டர் ராமதாஸ், பாமக.

தற்போது டாக்டர் ராமதாஸ் இருப்பது அ.தி.மு.க. கூட்டணி. அந்தக் கூட்டணியின் தலைவர் ஜெயா. அவர் தமிழகத்திலே மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென்று துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் அந்தக் கட்சிக்கு தற்போது போயிருக்கின்ற டாக்டர் ராமதாஸ், அந்த அம்மையாருக்கும் துரோகம் இழைக்கும் வகையிலும், அந்தக் கூட்டணியிலே இருக்கிற இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் "பெப்பே'' காட்டுகின்ற வகையிலும்- அந்தக் கூட்டணியிலே இருந்து கொண்டே, காங்கிரசாரின் கனவு நிறைவேறி தமிழகத்திலே காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டுமென்று சொல்கிறார்!
இப்போதாவது புரிகிறதா? அவர் எங்கே போனாலும், இருக்கும் இடத்திற்கு குழி பறிக்கத்தான் பார்ப்பார் என்பதற்கு இதைவிட ஒரு எடுத்துக்காட்டா வேண்டும்" என்று கூறியிருந்தார் கருணாநிதி.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications