'முத்துக்களோ கண்கள்'... பாருங்கள்... "சிவாஜி கணேசனாக" மாறி நிற்கும் கட்ஜுவைப் பாருங்கள்!
சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா நடித்த படத்தின் பாடல் ஒன்றை தனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
சென்னை: முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டே கட்ஜுவின் தமிழ்ப் பற்றும், தமிழ்க் காதலும் வர வர கூடிக் கொண்டே போகிறது. ஜல்லிக்கட்டு எழுச்சிப் போராட்டத்திற்குப் பிறகு அவர் முழுமையான தமிழ்க் காதலராக மாறி விட்டார்.
முகநூல் பக்கத்தில் தொடர்ந்து தமிழர்களுக்கும், தமிழர்களின் போராட்டங்களுக்கும் ஆதரவாக போஸ்ட் போட்டு வருகிறார் கட்ஜு. தமிழகத்தில் நடந்த இளைஞர்களின் எழுச்சிப் போராட்டம் அவரை வெகுவாக கவர்ந்து விட்டது. ஒட்டுமொத்த தமிழர்களையும் அவர் புகழாத நாள் இல்லை.

இந்த நிலையில் தனக்குப் பிடித்த தமிழ்ப் பாட்டு ஒன்றை அவர் தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1967-68ல் இருந்தபோது தான் இந்தப் பாட்டை விரும்பிக் கேட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இளைஞனாக இருந்தபோது அர்த்தமே புரியாத நிலையிலும் இப்பாடலை தான் கேட்டு ரசித்ததாக அவர் கூறியுள்ளார்.
அது சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா நடித்த முத்துக்களோ கண்கள் என்ற காதல் பாடலாகும். பாடலைக் குறிப்பிட்டதோடு விடாமல் அதன் யூடியூப் இணைப்பையும் சேர்த்துப் போட்டு அசத்தியுள்ளார் கட்ஜு.
இதற்கு செம ரெஸ்பான்ஸ். பலரும் கட்ஜுவை புகழ்ந்தும், வாழ்த்தியும், ஆச்சரியப்பட்டும் கமெண்ட் போட்டு வருகின்றனர். அதில் ஒரு கமெண்ட்டுக்குப் பதிலளித்த கட்ஜு, நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன், என்னால் டூயட் பாடவும் முடியும். தயாரிப்பாளர்களிடம் சொல்லுங்கள் என்று அன்புக் கோரிக்கையும் வைததுள்ளார் கட்ஜு.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications