இது உண்மையான்னு தெரியலை.. ஆனா இப்படித்தாங்க நடந்துச்சு!
சென்னை: இது வாட்ஸ் ஆப்பில் வழக்கம் போல வந்த மெசேஜ் என்று எடுத்துக் கொள்ள முடியாது. காரணம், நிஜமாகவே நிறைய பேருக்கு நடந்தது.
மழைக்கால அகதிகளாக மாறிப் போன சென்னைவாசிகள் இன்னும் கூட அந்த ஷாக்கிலிருந்து மீளவில்லை. வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு இன்று யார் யாரோ வந்து பாலூட்டி, ஆதரவு தந்து அரவணைத்துக் கொண்டுள்ளனர்.
இந்த மழைக்காலத்தில் சென்னை மக்கள் சந்தித்த சவால்கள், சங்கடங்கள், சிக்கல்களை ஜஸ்ட் லைக் தட் சொல்லி் விட முடியாது.. ஒவ்வொரு சென்னைவாசியும் இன்னும் அந்த மழை அனுபவம் கொடுத்த மன அழுத்தத்திலிருந்து வெளிவர முடியவில்லை.

இந்த செய்தியைப் பாருங்கள்
எங்கு பார்த்தாலும் இருட்டு, குடிக்கத் தண்ணீர் கிடையாது, பால் கிடையாது.. வெளியில் வெளுத்தெடுத்த மழை.. இப்படிப்பட்ட நிலையில் ஒரு மெசேஜ் வாட்ஸ் ஆப்பில் வலம் வந்தது. உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் அதில் உள்ள விஷயங்கள் நிச்சயம் பெரும்பாலானோருக்கு உண்மையாகிப் போனதுதான் நடந்தது.

எல்லாம் இருக்கு
அந்த மெசேஜ் இப்படிப் போனது... நான் பிரசன்னா வெங்கட்ராம். அமெரிக்க சாப்ட்வேர் நிறுவனத்தில், சென்னையில் சிஸ்டம் அனாலிஸ்ட் ஆக உள்ளேன். வருடச் சம்பளம் ரூ. 18 லட்சம். சென்னை புறநகரில் 3 பெட்ரூம் பிளாட் உள்ளது.

2 கிரெடிட் கார்டு
கைவசம் 2 கிரெடிட் கார்டுகள் உள்ள. ஒவ்வொன்றிலும் ரூ. 1 லட்சம் வரை கடன் வாங்க முடியும். வங்கிக் கணக்கில் ரூ. 65,000 பாலன்ஸ் உள்ளது.

ஆனால்..!
ஆனால் இப்ப என்ன நிலைமைன்னா எனது வீடு நீரில் மூழ்கிக் கிடக்கிறது. வெளியில் போக முடியவில்லை. எங்கு பார்த்தாலும் தண்ணீர்.. தண்ணீர். எனக்கு கொஞ்சம் குடிக்கத் தண்ணீரும், சாப்பிட ஏதாவதும் கிடைத்தால் போதும். உயிர் பிழைத்துக் கொள்வேன்.

நேற்று வரை
நேற்று வரை எனது அப்ரைசல் குறித்துக் கவலையோடு இருந்தேன். எப்படியும் 15 சதவீத ஊதிய உயர்வு இந்த வருடம் கிடைக்கும் என்றும் நம்பியிருந்தேன். ஆனால் இன்று எனது வீட்டு மொட்டை மாடியில் உணவுப் பொட்டலத்தை எந்த ஹெலிகாப்டராவது வந்து போடாதா என்று கவலையோடு காத்திருக்கிறேன்.

இயற்கையை மீறி எதுவுமே இல்லை பாஸ்
இயற்கையை மீறி எதுவுமே இல்லை பாஸ். யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாது. எதுவும் காப்பாற்ற முடியாது. உங்களை நீங்களேதான் காத்துக் கொள்ள முடியும். அதுதான் எதார்த்தம்.. இப்படிப் போனது அந்த மெசேஜ்.
இது பலருக்கு நிஜத்திலும் நடந்தது என்பதுதான் இந்த மழை நமக்குக் கற்றுக் கொடுத்த உண்மை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications