Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒன்இந்தியா வாசகர்களைப் பொறுத்தவரை சுதந்திரம் என்றால் இது தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் சட்டத்தை மதித்து நடந்தாலே சுதந்திரம் தான். மேலும் சுதந்திரம் என்பது அடுத்தவரை கொஞ்சம் கூட இம்சிக்காமல் நடந்துகொள்வது என்று ஒன்இந்தியா வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளை நாம் 69வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒன்இந்தியா வாசகர்கள் தங்களைப் பொறுத்த வரை சுதந்திரம் என்றால் என்ன என்று தெரிவித்துள்ளனர்.

சட்டம்

சட்டம்

மக்கள் சட்டத்தை மதித்து நடந்தாலே சுதந்திரம் தான். மேலும் சுதந்திரம் என்பது அடுத்தவரை கொஞ்சம் கூட இம்சிக்காமல் நடந்துகொள்வது என்று பிசாசுகுட்டி தெரிவித்துள்ளார்.

சுதந்திரம்

சுதந்திரம்

சுதந்திர நாள் கூட சுதந்திரமாய் கொண்டாட இயலாத சுதந்திர அடிமைகள் நாம். என் முன்னோர் பெற்றுதந்த சுதந்திரம் எனும் கிளியை பெருமையுடன் அடிமை கூண்டில் அடைத்து வைத்து கூண்டில் நின்று கொடியேற்றும் ஜனநாயக நாட்டின் குடிமக்கள் நாம் என கூறியுள்ளார் இந்து.

அடிப்படை தேவைகள்

அடிப்படை தேவைகள்

என் கடைகோடி சகோதரனுக்கும் எப்போது உணவு, உடை, வீடு கிடைக்கிறதோ அந்த நாளை மட்டும் தான் என் நாடும் என் மக்களும் சுதந்திரத்தை பெற்றதாக கருதுகிறேன் . நான் மட்டும் பெறுவது அல்ல சுதந்திரம் என்னை சுற்றி உள்ளவர்க்கும் கிடைக்க வேண்டும் என்கிறார் சூர்யா.

பொருளாதாரம்

பொருளாதாரம்

இன்னமும் கூட நம்மையும் நம் நாட்டு பொருளாதரத்தையும் மட்டுமே நம்பி வாழும் நிலை ஏற்படவில்லை. அது எப்போது கிடைக்குதோ அப்போதே முழு சுதந்திரத்தை அடி தட்டு முதல் மேல் தட்டு மக்கள் வரை பெறுவார்கள் என சதீஷ் பெரியசாமி கூறியுள்ளார்.

அர்த்தம்

அர்த்தம்

சு - சுய மரியாதையோடு வாழ்தல் வேண்டும் த - தன்னுடையது என்ற எண்ணம் ஒழிதல் வேண்டும் ந் - இன்னும் முயன்ற உதவிகள் புரிதல் வேண்டும் தி - திறன் பட உழைப்பதை நாட்டின் வளர்ச்சிக்கு அர்பணித்தல் வேண்டும் ர - இரத்ததில் நாம் இந்தியர் என்ற உணர்வு இருத்தல் வேண்டும் இவை அனைத்தும் இருத்தலே சுதந்திரம் எனும் வார்த்தையின் முழுமை... என்கிறார் ஹரிஹரன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+