ஈயம் பூசுபவர்களை முதலீட்டாளர் என்றது... வாட்ஸ் அப்பில் வலம் வரும் அதிமுகவின் வேதனை லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை: இதுதாங்க ஐந்து ஆண்டு கால அதிமுக அரசின் சாதனை என்று ஒரு லிஸ்ட் வாட்ஸ் ஆப்பில் வலம் வந்து கொண்டுள்ளது. இதைப் பார்த்து அதிமுகவினர் பெரும் பீதி அடைந்துள்ளனர். காரணம், அப்படியாப்பட்ட டென்ஷன் லிஸ்ட் அது!

5 ஆண்டுகால சாதனைகளை முன்வைத்து அதிமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2011 சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக சட்டசபையில் முதல்வர் அறிக்கை வாசித்தார். தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு, இலவசங்கள், தாலிக்கு என்பவை அந்த பட்டியலில் இருந்தது.

தேர்தல் வாக்குறுதிகளில் நீங்க சொன்னது மட்டுமா செஞ்சீங்க இதுவும்தானே செஞ்சீங்க... இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு நாங்க செய்வோம்ல என்று கூறி வாட்ஸ் அப்பில் அதிமுகவின் சாதனை (வேதனை)களை பட்டியலிட்டுள்ளனர் சிலர். அந்த பட்டியலை நீங்களும் படியுங்கள்.

This list panics ADMK
  • வெற்றி பெற்ற முதல் நாள் உங்கள் அரசு என்ற வார்த்தை மறுநாள் நான், எனது அரசு என்றானதே ..
  • சமச்சீர்கல்வியில் நீதிமன்றம் உங்கள் மூக்கை உடைத்தது.
  • பாட புத்தகங்களை அச்சடித்து 450 கோடியை வீணடித்தது.
  • அண்ணா நூலகத்தை நாசபடுத்தியது .
  • பஸ் கட்டணம் உயர்தியது.
  • பால் விலையை உயர்த்தியது.
  • மின்சார கட்டணத்தை உயர்த்தியது.
  • கடுமையான மின் தட்டுபாடை ஏற்படுத்தியது.
  • ஒரு மின்உற்பத்தி நிலையம் கூட அமைக்காது.
  • தொழில் வளர்ச்சியை முடக்கியது .
  • தொழில் நிறுவணங்கள் தமிழகத்தை விட்டே ஒடியது.
  • சட்டசபையை " பெஞ்ச் தட்டும் சபையாக " மாற்றியது.
  • கரும்பு விவசாயிகளை கதற விட்டது .
  • நெல் விவசாயிகளை நெம்பியெடுத்தது.
  • கிராம, தாலுகா அலுவலங்களில் இலவசமாக வழங்கபட்ட சான்றிதழ்களை பணம் கட்டி பெற வைத்தது.
  • சாலைகளே இல்லா தமிழகத்தை உருவாக்கியது.
  • உலகமே வியக்கும் ஓட்டை உடைசல் பேருந்து '
  • அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் மண்டையில் கொட்டியது.
  • தானே புயலில் கடலூரை தவிக்க விட்டது.
  • கொடநாட்டில் வாசம்.
  • பெண் புகாரில் சிக்கியவர்களை இடைத்தேர்தலில் நிறுத்தியது.
  • கச்சதீவு மீட்பை கனவாக்கியது.
  • மாற்றுதிறனாளிகளுக்கு மரண பயம் காட்டியது.
  • இலக்கு வைத்து மது விற்றது.
  • தமிழ்நாட்டு போலீஸை டாஸ்மாக் போலீஸாக்கியது.
  • ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு போனது.
  • நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தது.
  • மந்திரிகள் மண் சோறு தின்றது.
  • தாது மணலை கொள்ளையடித்தது.
  • ஆவின் ஊழல் .
  • கமல்ஹாசனை கலங்கடித்தது.
  • விஜய்யை வியர்க்க வைத்தது .
  • சகாயத்தை சுடுகாட்டில் படுக்க வைத்தது.
  • கனிமவளத்தை களவாடியது.
  • அப்துல் கலாமை அவமதித்தது.
  • ஊழல் ஐ.ஏ. எஸ் அதிகாரிகள் பட்டியல் வெளியானது.
  • 25 விதமான ஊழல் பட்டியல் வெளியானது.
  • முட்டை, பருப்பு ஊழல்.
  • மின்சாரத்தில் கமிஷன், மணல் கொள்ளை.
  • லோக் ஆயுத்தாவை அமல்படுத்தாதது .
  • பத்திர பதிவு கட்டணத்தை உயர்த்தியது.
  • நிலங்களின் வழிகாட்டு மதிப்பை தாறுமாறாக உயர்த்தியது .
  • ஜல்லிகட்டை ஜடமாக்கியது.
  • தர்மபுரியில் குழந்தைகள் இறந்தது.
  • திருப்பதியில் தமிழர்கள் மீதான போலி என்கவுன்டர் .
  • பார்வையற்றவர்களை பரிதவிக்க வைத்தது.
  • செவிலியரை சொல்லியடித்தது.
  • உயர் நீதிமன்ற பாதுகாப்பு மத்திய படையிடம் .
  • ஹெலிகாப்டரை கும்பிட வைத்தது.
  • ஆர். கே. நகரில் இமாலய கள்ள ஓட்டு.
  • செம்பர பாக்கத்தம்மா என விருது வாங்கியது.
  • வெள்ள நிவாரணத்தில் ஸ்டிக்கர் ஒட்டியது.
  • கோவனை கைது செய்தது.
  • பேனர் கிழிப்பில் விஜயகாந்திடம் ஜகா வாங்கியது.
  • மிடாஸில் மிதக்கும் தமிழகம்.
  • ஈயம் பூசுபவர்களை முதலீட்டாளர் என்றது.
  • விஷன் 2023 வெளியே வராமலே போனது .....
  • மன்னார்குடி வகையறாக்கள் வாங்கி குவிக்கும் தியேட்டர்கள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+