நல்ல வேளை.. இந்த சிலை எம்ஜிஆர் சிலை மாதிரிதான் இருக்கு!
சென்னை எம்ஜிஆர் கல்வி நிறுவனத்தில் நடிகர் ரஜினிகாந்த் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலையை திறந்து வைத்தார்.
Recommended Video

சென்னை: எம்ஜிஆர் கல்வி நிறுவனத்தில் நடிகர் ரஜினிகாந்த் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலையை திறந்து வைத்தார்.
நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். அதற்கான பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வரும் ரஜினிகாந்த் இன்று சென்னை வேலப்பன்சாவடியில் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் வெண்கல சிலையை திறந்து வைத்தார்.

எப்படி இருக்கப்போகிறதோ?
கல்லூரியின் 30வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த சிலை கல்லூரி வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது. சிலையை திறக்கும் முன்பே பலரும் இந்த சிலை எப்படி இருக்கப் போகிறதோ என எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.

ஜெ.போல் இல்லை
காரணம் அண்மையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தலைமைக் கழகத்தில் ஜெயலலிதாவின் 7 அடி உயர வெண்கல சிலை திறக்கப்பட்டது.ஆனால் அந்த சிலை கொஞ்சமும் ஜெயலலிதா போல் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.

காந்திமதி போல் உள்ளது
நெட்டிசன்கள் ஒருபடி மேலே போய், அதிமுக தலைமைக்கழகத்தில் திறக்கப்பட்டிருக்கும் சிலை, வளர்மதி போல் உள்ளது, வடிவுக்கரசி போல் உள்ளது, காந்திமதி போல் உள்ளது மேலும் சசிகலா போல் உள்ளது என்றும் விமர்சித்தனர்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது
அரசியல் கட்சியினர் பலரும் ஜெயலலிதா சிலைக்கு கீழே அவர்தான் என போர்டு வைக்க வேண்டும் என கிண்டலடித்தனர். இந்நிலையில் எம்ஜிஆர் கல்வி நிறுவனத்தில் இன்று எம்ஜிஆர் சிலை திறக்கப்பட்டது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.

எம்ஜிஆரைப் போல் இருக்கு
இதனால் இந்த சிலை எப்படி இருக்கப்போகிறது என்பதை காணும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்தது. நல்லவேளையாக இந்த சிலை எம்ஜிஆரைப் போலவே உள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications