சின்னமாவுக்கு' கிடைத்த வெற்றி இது... கூசாமல் சொல்லும் தம்பிதுரை
சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் பதவியேற்க அழைத்திருப்பது சின்னமாவுக்கு கிடைத்த வெற்றி என எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். இது சசிகலாவுக்கு கீடைத்த வெற்றி என லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சசிகலாவுக்கும், ஓபிஎஸ்க்கும் இடையே ஏற்பட்ட மோதலால் தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக முதல்வர் யார் என்ற குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து இன்று மாலை பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது இது தர்மத்தின் வெற்றி என்று அவர் கூறினார். அதிமுக ஆட்சி தொடரும் என்றும் தம்பிதுரை கூறினார். தமிழக மக்களின் நலனுக்காக அதிமுக தொடர்ந்து பாடுபடும் எனவும் தம்பிதுரை தெரிவித்தார்.
ஜெயலலிதா வழியில் ஆட்சித் தொடரும் என்று கூறிய தம்பிதுரை இது சசிகலாவுக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறினார். தம்பிதுரையின் இந்த பேச்சு சசிகலாவை வெறுக்கும் அதிமுக அடிமட்ட தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications