Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த முறை வேறலெவலில் நடக்க போகும் ஹேப்பி ஸ்ட்ரீட்: அதுவும் சென்னையின் இதயப்பகுதியில்.. ரெடியாகுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி இந்த முறை சென்னையின் இதயப் பகுதியான அண்ணாசாலையில் நடைபெறப்போவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னையின் அண்ணா நகர், கேகே நகர், அசோக் நகர், அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை, தியாகராய நகர், சோழிங்கநல்லூர், அடையாறு, மயிலாப்பூர் என சென்னை முக்கிய பகுதிகளில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

குறிப்பாக சென்னையின் போக்குவரத்து நெரிசலான பகுதிகளில் அந்த நெரிசலை மறந்து, ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய போக்குவரத்து இல்லா சாலை என்னும் ஹாப்பி ஸ்ட்ரீட் (happy Street) நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

This week Happy Street Event will be held on Chennai Anna Road : says Chennai traffic police

இந்த நிகழ்ச்சியின்போது சாலையில் முற்றிலும் போக்குரவத்து தடை செய்யப்படும். அங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில், பம்பரம் விடுதல், கோணி பை தாவுதல், டயர் ஓட்டுதல், கயிறு இழுத்தல், செஸ், பரமபதம், கராத்தே, கோலமிடுதல், பாட்டு போட்டி, நடனம், நாய், பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கான நிகழ்ச்சிகள் இடம் பெறும்.

மேலும் தப்பாட்டம், மயிலாட்டம், பறை இசை போன்றவையும் இடம் பெறும். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இசைக்கு ஏற்ப நடனமாடி மகிழ்வார்கள். காவல்துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வும் இடம் பெறும். ஒட்டுமொத்தமாக பார்த்தால் காங்ரீட் காட்டில், அடுக்குமாடி கூண்டில் அடைப்பட்டு கிடக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.

இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி இந்த முறை சென்னையின் இதயப் பகுதியான அண்ணாசாலையில் நடைபெறப்போவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. ஸ்பெச்னர் பிளாசா தொடங்கி ஜெமின் பிரிட்ஜ் இடையே உள்ள பகுதியில் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ளது. அதாவது ஏப்ரல் 30ம் தேதி, மே 7ம் தேதி, மே 14, மே21 ஆகிய நாட்களில் (ஞாயிறு) இங்கு ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற போகிறது. அதிகாலை 3 மணிக்கு தொடங்கி காலை 9.30 மணி வரை இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவித்துள்ளது போக்குவரத்து காவல்துறை. எனவே சென்னைமக்களே அண்ணா சாலையில் நடைபெறும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொண்டாடுங்கள்.

This week Happy Street Event will be held on Chennai Anna Road : says Chennai traffic police

போக்குவரத்து மாற்றம்: சென்னை மக்களே அண்ணா சாலையில் நடைபெறும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி காரணமாக அண்ணா சாலையில் ஞாயிறு காலை மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. அண்ணா சாலையில் செல்ல விரும்புவர்கள், திருவிக ரோடு வழியாக ஜெமினி பிரிட்ஜை அடையலாம். ஜெமினி பிரிட்ஜில் இருந்து செல்பவர்கள் அருகே உள்ள ஆயிரம் விளக்கு சாலை வழியாக உள்ளே புகுந்து லிங்க் ரோடு அல்லது எழும்பூர் சாலையை அடைந்து சாந்தி தியேட்டர் சந்திப்பை அடையலாம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+