திராவிட இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயுள்ளார்கள்.. ஸ்டாலின் ஆவேசம்!
திராவிட இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயுள்ளார்கள் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: திராவிட இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயுள்ளார்கள் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் நடந்த திருமண விழாவில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் சீர்திருத்த திருமணம் சட்டப்படி செல்லும் என்றார்.

சீர்திருத்த திருமணம் சுயமரியாதையுடையது என்றும் அவர் கூறினார். சீர்திருத்த திருமணம் சட்டப்படி செல்லும் என அறிவித்த அறிஞர் அண்ணா என்றும் ஸ்டாலின் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின் எந்த சூழலிலும் திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என்றார்.திராவிட இயக்கத்தை அழிக்க நினத்தவர்கள்தான் அழிந்து போய் உள்ளார்கள் என்றும் ஸ்டாலின் கூறினார்.
எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்த மறுநாளே ஆட்சி கவிழும் என்றும் அவர் கூறினார். பின்னர் நடக்கும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications