தூத்துக்குடி அண்ணாநகரில் ஆயுதமேந்திய மத்திய கமாண்டோ படை அணிவகுப்பு, வஜ்ரா வாகனம் வரவழைப்பு!
தூத்துக்குடி அண்ணாநகரில் ஆயுதமேந்திய கமாண்டோ படை வீரர்கள் மற்றும் போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.
Recommended Video

தூத்துக்குடி: அண்ணாநகரில் ஆயுதமேந்திய கமாண்டோ படை வீரர்கள் 100க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர். வஜ்ரா வாகனமும் கொண்டுவரப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனை தடுக்க முயன்ற காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது. 70க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாகனங்கள் சேதம்
இந்நிலையில் தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் மூன்றாவது நாளாக இன்றும் பதற்றம் நீடிக்கிறது. இன்று காவல்துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டது.

மத்திய கமாண்டோ படை
இதனால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் அண்ணாநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய மத்திய கமாண்டோ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிரடிப்படை போலீசார்
500க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசாரும் அண்ணாநகர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தெரு முனைகளில் நின்றபடி அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கமாண்டோ படை அணிவகுப்பு
இதனிடையே தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் ஐஜிக்கள் வரதராஜ், சண்முகராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மத்திய கமாண்டோ படையினர் மற்றும் 500க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.

வஜ்ரா வாகனம் வரவழைப்பு
மேலும் அண்ணாநகர் பகுதியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்த வஜ்ரா வாகனமும் கொண்டுவரப்பட்டுள்ளது. அண்ணாநகர் பகுதியில் நீடிக்கும் பதற்றத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications