மதுரை வந்தார் கள்ளழகர்... மூன்று மாவடியில் எதிர்சேவை.... நாளை வைகை ஆற்றில் இறங்குகிறார்!!
மதுரை: கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் வேல் கம்புடன் பக்தர்கள் "கோவிந்தா" கோஷம் முழங்க, அழகர் மலையில் இருந்து தங்கப் பல்லக்கில் மதுரை வந்தார் கள்ளழகர். இன்று காலையில் மூன்றுமாவடியில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகரை எதிர்சேவை செய்து வரவேற்றனர். திங்கட்கிழமை காலை 7 மணிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்குகிறார்.
அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 30ல் துவங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. சனிக்கிழமை காலை தோளுக்கினியான் அலங்காரத்தில் பெருமாள் கோயிலை வலம் வந்தார். மாலை 6.10 மணிக்கு கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் வேல் கம்புடன், மேள, தாளம் முழங்க தங்கப்பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டார் கள்ளழகர்.

புறப்பட்ட கள்ளழகர்
ராஜகோபுரத்தில் உள்ள காவல் தெய்வமான 18ம் படி கருப்பண சுவாமி சன்னதி எதிரில் உள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு வையாழியானவுடன், கொம்பு சாத்தும் நிகழ்ச்சியும், தீப ஆராதனைகளும் நடந்தன. கருப்பணசுவாமியிடம் அனுமதி பெற்று இரவு 7 மணிக்கு கோயிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார். பக்தர்கள் "கோவிந்தா" கோஷம் முழங்க அழகரை தரிசித்தனர்.

விடிய விடிய எதிர்சேவை
இரவு முழுவதும் வழி நடை பயணமாக வந்த கள்ளழகர், இன்று காலை 6 மணிக்கு மூன்றுமாவடி வருகைதந்தார். அங்கு காத்திருந்த பக்தர்கள் கள்ளழகரை கோவிந்தா முழக்கமிட்டு எதிர்கொண்டு அழைத்தனர். காலை 8.30 மணிக்கு புதுாரிலும் எதிர்சேவை நடைபெற்றது. தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் அழகர் தங்கியுள்ளார்.

ஆண்டாள் சூடிய மாலை
இரவு 12.30 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் திருமஞ்சனம் நடக்கிறது.பின் இரவு 2 மணிக்கு ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை ஏற்றுக்கொண்டு புறப்படும் அழகர் வெட்டிவேர் சப்பரத்திலும், 3 மணிக்கு தமுக்கம் எதிரில் ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளுகிறார்.

வைகை ஆற்றில்
வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக தங்க குதிரை வாகனத்தில் புறப்படும் கள்ளழகர், திங்கட்கிழமை காலை 6.45 மணிக்கு மேல் 7.10 மணிக்குள் பக்தர்களின் "கோவிந்தா" கோஷம் முழங்க ஆற்றில் இறங்குகிறார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை ஒட்டி மதுரை மாவட்டத்துக்கு திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை அளிகப்பட்டுள்ளது.

ராமராயர் மண்டபத்தில்
காலை 8 மணிக்கு அங்கிருந்து புறப்படும் அவர், காலை 10 மணிக்கு ராமராயர் மண்டபம் செல்கிறார். அங்கு பக்தர்கள் தண்ணீர் பாய்ச்சி அடிக்கும் நிகழ்ச்சி நடக்கும்.பின்னர் வண்டியூர் வீரராகவபெருமாள் கோயிலில் இரவு எழுந்தருளி காட்சி தருகிறார்.

மாண்டூக மகரிஷிக்கு சாபம்
5ஆம் தேதி காலை சேஷவாகனத்தில் புறப்பட்டு, பின்னர் கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தருகிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் நடைபெறும். 6ம் தேதி அதிகாலை மோகன அவதாரத்தில் அழகர் காட்சி தருகிறார். அன்று பிற்பகல் ராஜ திருக்கோலத்தில் அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு அன்றிரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறும்.

அழகர் மழைக்கு பயணம்
மே 7ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு பூப்பல்லக்கில் அழகர்மலை நோக்கி புறப்படுகிறார். அன்றிரவு அப்பன்திருப்பதி மண்டபத்தில் காட்சி தருகிறார். 8ம் தேதி காலையில் கோயிலுக்குச் சென்று இருப்பிடம் சேருகிறார். 9ம் தேதி உற்சவ சாந்தி, மஞ்சள்/ நீர்சாற்றும் முறையுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications