சித்திரை திருவிழா தேரோட்டம்: மதுரை, மானாமதுரை, சங்கரன்கோவிலில் கோலாகலம்
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஞாயிறன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. நான்கு மாசி வீதிகளில் ஆடி அசைந்த வந்த தேரினை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மே 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடந்தது.

சித்திரை தேரோட்டம்
முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் ஞாயிறு காலை கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு மீனாட்சி, சுவாமி மற்றும் பிரியாவிடை கோயிலில் இருந்து புறப்பாடாகினர். சுந்தரேஸ்வரர், பிரியாவிடை பெரிய தேரில் காலை 6.05 மணிக்கு எழுந்தருளினர்.
பக்தர்கள் தரிசனம்
‘சம்போ ஹர, ஹர மகாதேவா' என்ற பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளக்க தேர் புறப்பட்டது. தொடர்ந்து சுமார் அரை மணி நேர இடைவெளியில் மீனாட்சி அம்மன் எழுந்தருளிய சின்ன தேரும் புறப்பட்டது. இத்தேர்களை போட்டி போட்டுக்கொண்டு பலரும் வடம்பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்மனை வழிபட்டனர்.

சங்கரன்கோவில் சித்திரை திருவிழா
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
சங்கரன்கோவிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாள்கள் நடைபெறும்.
வடம் பித்த பக்தர்கள்
9-ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை சுவாமி, அம்பாள் எழுந்தருளிய தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சுவாமி, அம்பாள் அதிகாலையில் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். அப்போது சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து, காலை 9.50 மணிக்கு சுவாமி தேர் புறப்பட்டு வடக்கு ரத வீதிக்கு வந்ததும் அங்கு நிறுத்தப்பட்டது. பின்னர், முற்பகல் 11 மணிக்கு அம்பாள் தேர் புறப்பட்டது. திரளான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர்.
மானாமதுரை தேரோட்டம்
மானாமதுரை, ஆனந்தவல்லி சோமநாதர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, நேற்று தேரோட்டம் நடைபெற்றது. ஞாயிறு காலை 9 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில், பிரியாவிடையுடன், சோமநாதர், ஆனந்தவல்லியம்மன் தேரில் எழுந்தருளினர். பட்டர்கள் அம்பி, குமார், பரத்வாஜ் ஆகியோர் பூஜைகள் செய்ய, ஏராளமான பக்தர்கள் தேர் வடத்தை பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரதவீதிகளையும் சுற்றி காலை 11:30 மணிக்கு, நிலையை அடைந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications