பி.எஸ். அப்துர் ரஹ்மான் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி
சென்னை: உலக அரங்கில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த பி.எஸ். அப்துர் ரஹ்மான் உடல் சென்னையில் நல்லடக்கம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவரது உடலுக்கு பல்துறைப் பிரமுகர்கள் பெரும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

உலக அரங்கில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த பிரபல கல்வியாளரும், தொழிலதிபரும், கொடை வள்ளலுமான பி.எஸ். அப்துர் ரஹ்மான் உடல் நேற்று பகல் சென்னை வண்டலூர் பி.எஸ்.ஏ, பல்கலைக்கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பல்வேறு அர்சியல் தலைவர்கள், சமுதாயப் பிரமுகர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேரா. காதர் மைதீன், கீழக்கரை தொழிலதிபர் செய்யத் எம். சலாஹூத்தீன், நீதிபதி அக்பர் அலி, மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ., அவரது புதல்வர்கள் ஆரிஃப் பி. ரஹ்மான், அப்துல் காதர் புஹாரி, அஹ்மது புஹாரி, அஷ்ரஃப் புஹாரி, மருமகன் காலித் புஹாரி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் நல்லடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தலைநகர் சென்னையின் முக்கிய அடையாளங்களான ஜெமினி மேம்பாலம், வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், அண்ணா நகர் டவர் உள்ளிட்ட கட்டிடங்களை கட்டியவர் அப்துர் ரஹ்மான். இ.டி.ஏ. நிறுவனத்தை நிறுவி உலகம் முழுவதும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்களை நிறுவி கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications