கூவத்தூர் ரிசார்ட்டை சுற்றி 1000 போலீசார் குவிப்பு.. பதட்டம் !
அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் ரிசார்ட்டை சுற்றி ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் சொகுசு ரிசார்ட்டை சுற்றி 1000 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று இரு அணி உருவாகியுள்ளது. ஓபிஎஸ் பக்கம் பலரும் சென்று வருவதால் சசிகலா அணி அதிர்ச்சி அடைந்துள்ளது. முதல்வர் நாற்காலியில் ஒரு நாளாவது உட்கார்ந்துவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இருக்கிறார் சசிகலா.

இதற்காக ரிசார்ட்டில் எம்எல்ஏக்களைப் பார்த்து சமாதானமாக பேசி வருகிறார். ஒரே குடும்பம், ஓபிஎஸ் பக்கம் மட்டும் சென்று விட வேண்டாம் என்று பேசி வருகிறார் சசிகலா. இதனிடையே மூன்றாவது முறையாக ரிசார்ட்டுக்கு வந்த சசிகலா நேற்று அங்கேயே தங்கியுள்ளார்.
இதையடுத்து, கூவத்துாரில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க ஐ.ஜி. தாமரை கண்ணன் தலைமையில் 2 எஸ்.பி.,க்கள் உட்பட 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் பாதுகாப்பை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications