கம்பராமாயணத்திலேயே தோழர் என்ற வார்த்தை உள்ளது.. கோவை கமிஷனருக்கு முத்தரசன் பதிலடி
கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், தனது பேட்டியின்போது மாணவர்கள், அவர்களிடம் யாராவது தோழர் என்று வந்து அழைத்தால் அவர்களின் தொடர்பை துண்டித்துவிடுங்கள் என கூறியிருந்தார்.
மதுரை: கம்ப ராமாயணத்தில் கம்பனே உயிர்காப்பான் தோழன் என்று கூறியுள்ளார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீதான, போலீஸ் அடக்குமுறைக்கு எதிராக மதுரையில் இன்று, மக்கள் நல கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் முத்தரசன் கூறியதாவது:
தோழர் என்ற வார்த்தைக்கு எதிராக காவல்துறை அதிகாரி கருத்து கூறியது சரியில்லை. தோழர் என்ற வார்த்தைக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது.

கம்பன் கூறிய வார்த்தை
தந்தை பெரியார் தோழர்களே என்றுதான் அழைப்பார். கம்பராமாயணத்தில் கம்பன், 'உயிர் காப்பான் தோழன்' என்று கூறியுள்ளார். எந்த உறவையும் கூட இப்படி கம்பன் உயர்த்தி கூறவில்லை. தமிழக சட்டசபையில் பிடல் காஸ்ட்ரோவுக்கு அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றும்போது தோழர் காஸ்ட்ரோ எனறுதான், கூறப்பட்டது. ஆனால் தோழர் என்ற வார்த்தைக்கு பொருள் தெரியாத அதிகாரி அதை தவறாக கூறியுள்ளார். அதிகாரிகளின் திசை திருப்பும் பேட்டிகளை கண்டிக்கிறோம்.

பெண்கள் தீவிரவாதிகளா?
கோவையில் மார்க்சிஸ்ட், இ.கம்யூ, வி.சிறுத்தை தோழர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளார்கள். சென்னையில் மீனவர்கள், பெண்களை தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் தீவிரவாதிகளா? போலீசார் மோசமான, கொடூரமான தாக்குதல் நடத்தியடோது. தீ வைப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

நிவாரணம்
இத்தைகைய காவல்துறை கா்டுமிராண்டித்தனத்தை கண்டித்து மக்கள் நல கூட்டணி சார்பில் சென்னை, கோவை, மதுரையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது. காவல்துறையின் கொடுமைகள் பற்றி, விரிவான நீதி விசாரணை நடைபெற வேண்டும். தப்பு செய்த அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம். இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

விடுதலை
போராட்டக்காரர்களில் 156க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலரை போலீசார் தேடிக்கொண்டுள்ளனர். இதை நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு அடிபணிந்து தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார். கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், தனது பேட்டியின்போது மாணவர்கள், அவர்களிடம் யாராவது தோழர் என்று வந்து அழைத்தால் அவர்களின் தொடர்பை துண்டித்துவிடுங்கள் என கூறியிருந்தார். இது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications