கடன் கேட்டு தர மறுத்த சகோதரன் கொலை .... 3 பேர் கைது
சேலம்: சேலம் அருகே கடன் கேட்டு தர மறுத்த சகோதரனை குடி போதையில் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலையை அடுத்த மொட்டையன் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு ஈஸ்வரன், சென்னிமலை , சந்திரன் , பழனியப்பன் என நான்கு மகன்கள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தராஜ் உயிரிழந்தார். இந்த நிலையில், அவருக்குச் சொந்தமான 16 சென்ட் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.18 லட்சத்துக்கு நான்கு பேரும் சேர்ந்து விற்றனர். அந்த தொகையை 4 சகோதரர்களும் பிரித்துத்துக் கொண்டனர். அதில், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.3.90 லட்சம் கிடைதுள்ளது. இதில், ஈஸ்வரன், சந்திரன், பழனியப்பன் ஆகியோர் நிலத்தை விற்ற பணத்தில் தங்கள் கடனை அடைத்தனர்.
அதையடுத்து, சென்னிமலை வைத்திருந்த ரூ.3.90 லட்சம் பணத்தில் இருந்து ஈஸ்வரன், சந்திரன், பழனியப்பன் ஆகியோர் தலா ரூ.1 லட்சம் கடன் கேட்டுள்ளனர். ஆனால் அவர் அந்த பணத்தை வைத்து தொழில் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சகோதரர்களுக்குள் இந்த பணம் தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டது. குடிபோதையில் இருந்த மூன்று பேரும் ஆத்திரத்தில் சென்னிமலையை அடித்துக் கொலை செய்தனர். இது தொடர்பாக, இரும்பாலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஈஸ்வரன், சந்திரன், பழனியப்பன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications