முன்விரோதத்தால் தென்காசி ஒப்பந்தக்காரர் கொலை... கேரளாவில் 3 பேர் கைது
செங்கோட்டை: முன்விரோதம் காரணமாக தென்காசி ஒப்பந்தக்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கேரளாவில் தேடப்பட்டு வந்த 3 பேரை கேரளாவில் கைது செய்துள்ளனர்.
கேரளமாநிலம் தென்மலை அருகேயுள்ளது எடமன். இந்த ஊரில் செங்கோட்டை -புனலூர் அகல ரயில் பாதை க்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது.இந்த பணிகளுக்காக தென்காசியை சார்ந்த இசக்கிமுத்து என்பவர் தொழிலாளர்களை அழைத்து வரும் ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கும் நெல்லையை சார்ந்த மாரியப்பன் என்பவருக்கும் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து செல்வதில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி இசக்கிமுத்துவைக் காணவில்லை.
மறுநாள் எடமன் தொலைபேசி அலுவலகம் அருகில் ரத்த காயத்தோடு இசக்கிமுத்து பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து தென்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நெல்லையை சார்ந்த மாரியப்பன், சாம்பவர் வடகரையை சார்ந்த கணேசன், கல்லிடைக்குறிச்சியை சார்ந்த ஈத்தான் ஆகிய 3பேரும் சேர்ந்து இசக்கிமுத்துவை பாட்டிலால் தலையில் அடித்து கொலை செய்து தொலைபேசி அலுவலக மாடியில் போட்டு சென்றது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து தென்மலை போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த 3பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் மூன்று பேரும் தென்மலை அருகே கைது செய்யப் பட்டனர். பின்னர் குளத்துப் புழா காவல் நிலையத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன் விரோதம் காரணமாக இசக்கிமுத்துவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்து புனலூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications