பெரியகுளம் அருகே கண்மாயில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி.. கிராம மக்கள் சோகம்
பெரியகுளம் அருகே கண்மாயில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

தேனி: பெரியகுளம் அருகே கண்மாயில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக நீரில் முழ்கி சிறுவர்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. விடுமுறை நாட்கள் என்பதால் கோடை வெயிலை சமாளிக்க சிறுவர்கள் ஏரி, குட்டை, கண்மாய் என நீர்நிலைகளில் குளித்து மகிழ்கின்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு செல்லும் அவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடவீரநாயக்கன்பட்டி கண்மாயில் குளித்த சிறுவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
எழுவனம்பட்டி கிராமத்தை சேர்ந்த மிதுன்(10), கோபிநாதன்(12), ஜீவா(11) ஆகிய மூன்று சிறுவர்கள் ஏரியில் குளித்த போது பரிதாபமாக மூழ்கி உயிரிழந்தனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications